Kamal Haasan: கீர்த்தி சுரேஷுக்கு அழகோடு அறிவும் இருக்கிறது, அதனால் தான்…: கமல்

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Maamannan: கீர்த்தி சுரேஷை பற்றி கமல் ஹாசன் தெரிவித்த விஷயம் அவரின் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துவிட்டது.

​மாமன்னன்​மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ், வைகை புயல் வடிவேலு, ஃபஹத் ஃபாசில் உள்ளிட்டோர் நடித்திருக்கும் படம் மாமன்னன். சென்னையில் இருக்கும் நேரு உள்விளையாட்டரங்கில் அந்த படத்தின் இசை வெளியீட்டு விழா பிரமாண்டமாக நடைபெற்றது. அதில் உலக நாயகன் கமல் ஹாசன் கலந்து கொண்டு பாடல்கள் மற்றும் ட்ரெய்லரை வெளியிட்டார்.Maamannan: உதயநிதி ஸ்டாலினின் மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் அழுத கமல்​

சரத்குமார்​”Please..இத மட்டும் வெளிய சொல்லாதீங்க.- கெஞ்சிய சரத்குமார்!​​கீர்த்தி சுரேஷ்​நிகழ்ச்சியில் பேசிய கமல் ஹாசன் கீர்த்தி சுரேஷை பாராட்டினார். அழகோடு அறிவும் உள்ளவர் கீர்த்தி சுரேஷ் என்றார் கமல். மாமன்னன் படத்தை தேர்வு செய்ததற்காக கீர்த்தியை அப்படி பாராட்டினார் கமல் என்று கூறப்படுகிறது. ஆண்டவர் சொல்வது சரி தான். கீர்த்தி சுரேஷுக்கு அழகு மட்டும் அல்ல அறிவும் இருக்கிறது என அவரின் ரசிகர்கள் பெருமையாக பேசிக் கொண்டிருக்கிறார்கள்.
​கமல்​மாமன்னன் படத்தை கமல் ஹாசனுக்கு போட்டுக் காட்டியிருக்கிறார் உதயநிதி ஸ்டாலின். படம் பார்த்த கமல் அது பற்றி கூறியிருப்பதாவது, மாமன்னன் படம் பெரிய அளவில் வெற்றி பெற வேண்டும் என்பதே என் விருப்பம். அரசியல் த்ரில்லராக உருவாகியிருக்கும் அந்த படத்தை பற்றி பேச நிறைய விஷயங்கள் இருக்கிறது. அடுத்தவர்களும் கருத்து தெரிவிக்க இடம் கொடுப்பார் மாரி செல்வராஜ். அது தான் அவரிடம் எனக்கு மிகவும் பிடித்தது என்றார் கமல் ஹாசன்.

​ஆண்டவர்​கமல் ஹாசன் மேலும் கூறியதாவது, படம் நன்றாக இருக்க வேண்டும் என மக்கள் நினைப்பார்கள். ஆனால் நான் படத்தை ஏற்கனவே பார்த்துவிட்டதால் அது வெற்றி பெற வேண்டும் என நினைக்கிறேன். அதுவே என் ஆசை என்றார். மாமன்னன் பற்றிய முதல் விமர்சனத்தை கமல் ஹாசன் தெரிவித்துள்ளார். ஆண்டவர் வாயால் நல்ல வார்த்தை வந்தது உதயநிதி ஸ்டாலின் ரசிகர்களை மகிழ்ச்சி அடைய வைத்திருக்கிறது.

​Kamal Haasan:மாமன்னன் படம் பார்த்துவிட்டேன், முதல் விமர்சனத்தை வெளியிட்ட கமல்

​கண்ணீர்​மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மானும், வடிவேலுவும் சேர்ந்து பாடினார்கள். அவர்கள் பாடியதை கேட்டு உணர்ச்சிவசப்பட்டார் கமல் ஹாசன். அவர் கண்ணில் இருந்து கண்ணீர் வருவதை பார்த்த ரசிகர்கள் நெகிழ்ந்துவிட்டார்கள். கமல் அழுத அந்த வீடியோ வைரலாகிவிட்டது. மாமன்னன் படத்தில் ஏ.ஆர். ரஹ்மான் இசையில் பாடியிருக்கிறார் வடிவேலு என்பது குறிப்பிடத்தக்கது.
​உதயநிதி​மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் சிவகார்த்திகேயன் கலந்து கொண்டார். புதுப் படத்திற்காக ஹேர்ஸ்டைலை மாற்றியிருக்கிறார். அது யாருக்கும் தெரிந்துவிடக் கூடாது என்பதால் தொப்பி அணிந்து வந்திருந்தார். இதற்கிடையே மாமன்னன் படத்துடன் நடிப்புக்கு முழுக்கு போடப் போவதாக தெரிவித்திருந்தார் உதயநிதி ஸ்டாலின். தற்போது அவர் தன் முடிவை மாற்றிக் கொண்டிருக்கிறார்.
​நடிப்பு​மாமன்னன் படத்திற்கு பிறகு 3 ஆண்டுகள் பிரேக் எடுக்கிறேன். அதன் பிறகு மீண்டும் நடிக்கும் சூழல் உருவாகினாலோ அல்லது ரசிகர்கள் கோரிக்கை விடுத்தாலோ மீண்டும் படங்களில் நடிப்பேன். அப்படி நான் மீண்டும் நடிக்க வந்தால் அந்த படத்தை மாரி செல்வராஜ் தான் இயக்குவார் என தெரிவித்திருக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.