Leo: தன் அடுத்த படத்திற்காக லோகேஷுடன் இணையும் சிம்பு ? இது நம்ப லிஸ்ட்லயே இல்லையே..!

லோகேஷ் கனகராஜின் மவுசு நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகின்றது. மாநகரம், கைதி, மாஸ்டர் என ஹாட்ரிக் வெற்றியை பதிவு செய்த லோகேஷ் உலகநாயகனின் விக்ரம் படத்தை இயக்கும் வாய்ப்பை பெற்றார். அந்த வாய்ப்பை திறன்பட பயன்படுத்தி மிகப்பெரிய வெற்றியை கொடுத்த லோகேஷ் இந்தியளவில் பிரபலமான இயக்குனர்களில் ஒருவராக உருவெடுத்தார்.

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்

தற்போது இந்திய திரையுலகில் இருக்கும் முன்னணி நடிகர்கள் அனைவரும் லோகேஷின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்து வருகின்றனர். மேலும் பல தயாரிப்பு நிறுவனங்கள் லோகேஷின் படத்தை தயாரிக்க அவருக்கு பலகோடி சம்பளம் கொடுக்க தயாராக இருக்கின்றது.

லோகேஷ் கனகராஜ்

அவ்வளவு ஏன் சூப்பர்ஸ்டார் ரஜினியே லோகேஷை அழைத்து அவரின் இயக்கத்தில் நடிக்க விருப்பம் தெரிவித்துள்ளார். இவர்கள் கூட்டணியில் தலைவர் 171 திரைப்படம் உருவாவது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்நிலையில் தற்போது விஜய்யின் லியோ படத்தை இயக்கி வரும் லோகேஷ் இப்படத்தை முடித்த கையோடு கார்த்தியின் கைதி 2 படத்தை இயக்குவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

Ajith: விடாமுயற்சி படத்தில் முதலில் எடுக்கப்போவது இந்த காட்சிகள் தானாம்..அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!

இதைத்தொடர்ந்து ரஜினியுடன் தலைவர் 171 படத்தில் இணைவார் என்று செய்திகள் வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க லோகேஷ் நடிகராகவும் அவதாரம் எடுக்க இருக்கின்றாராம். ஆர்.ஜெ பாலாஜி நடிப்பில் உருவாகும் சிங்கப்பூர் சலூன் என்ற படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்துள்ள லோகேஷ் ஒரு படத்தில் லீட் ரோலிலும் நடிப்பதாக பேசப்பட்டு வருகின்றது.

சிலம்பரசன்

இந்நிலையில் நடிகராகவும் அவதாரம் எடுத்துள்ள லோகேஷ் கதாசிரியராகவும் உருவெடுக்க இருக்கின்றாராம். அதாவது சிம்புவின் 49 ஆவது திரைப்படத்திற்காக லோகேஷ் கதை எழுத இருப்பதாகவும், அப்படத்தை லோகேஷின் உதவி இயக்குனர் ஒருவர் இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

சிம்பு தற்போது ராஜ்
கமல்
பிலிம்ஸ் சார்பாக கமல் தயாரித்து வரும் STR 48 படத்திற்காக தயாராகி வருகின்றார். மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படம் சிம்புவின் திரைப்பயணத்தில் மிகமுக்கியமான படமாக்க இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் உருவாகப்போகும் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் துவங்கவுள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

இதையடுத்து சிம்பு நடிக்கவுள்ள அவரது 49 ஆவது படத்திற்காக லோகேஷுடன் கூட்டணி அமைக்கவுள்ளார் என செய்திகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றது. லோகேஷின் கதை மற்றும் திரைக்கதையில் சிம்பு நடிப்பதாகவும், அப்படத்தை லோகேஷின் உதவி இயக்குனர் இயக்கயிருப்பதாகவும் தகவல்கள் வருகின்றன.

ஆனால் இந்த தகவல் எந்தளவிற்கு உண்மை என தெரியவில்லை. இருந்தாலும் லோகேஷ் மற்றும் சிம்பு கூட்டணியில் ஒரு படம் உருவாக இருப்பதாக வந்த தகவல் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது.நடந்தால் நல்லாத்தான் இருக்கும்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.