இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விஜய் நடித்து வரும் லியோ படத்திலிருந்து அறிவிப்பு வெளியாகி பல நாட்கள் ஆகிவிட்டது. ரசிகர்கள் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு லியோ படக்குழு அறிவிப்புகளை வெளியிட்டது. படத்தின் அறிவிப்பையே ஒரு வீடியோவின் மூலம் வெளியிட்ட லியோ படக்குழு தன் அடுத்தடுத்த அறிவிப்புகளால் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியது.
இதையடுத்து படக்குழு விறுவிறுப்பாக படப்பிடிப்பை நடத்தி வர அதன் பின் எந்த ஒரு அறிவிப்புகளும் வெளியாகாமல் இருந்தது. அதான் போதும் போதும் என சொல்லும் அளவிற்கு அறிவிப்புகளை லியோ படக்குழு வெளியிட்டதே என ரசிகர்களுக்கும் அடுத்த அறிவிப்பு எப்போது வரும் என கேட்காமல் இருந்தனர்.
Ajith: விடாமுயற்சி படத்தில் முதலில் எடுக்கப்போவது இந்த காட்சிகள் தானாம்..அப்போ ரசிகர்களுக்கு செம ட்ரீட் தான்..!
ஆனால் தற்போது விஜய்யின் பிறந்தநாள் நெருங்கும் நிலையில் ரசிகர்கள் படக்குழுவிடம் இருந்து அறிவிப்புகளை எதிர்பார்க்கின்றனர். ஒவ்வொரு தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டும் அவர் அந்த சமயத்தில் நடித்து வரும் படத்தின் அறிவிப்புகள் கண்டிப்பாக வெளியாகும். அதே போல இம்முறையும் லியோ படத்திலிருந்து கண்டிப்பாக அறிவிப்பு வெளியாகும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பாகவும்இருந்து வருகின்றது.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
மேலும் லியோ படத்தின் அறிவிப்பு வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டதால் விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தரமான ஒரு அப்டேட்டை எதிர்பார்த்து ரசிகர்கள் காத்துக்கொண்டிருக்கின்றனர். இந்நிலையில் தற்போது லியோ படத்தின் படப்பிடிப்புகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. சென்னையில் மிகப்பெரிய செட் அமைத்து படப்பிடிப்பை லோகேஷ் நடத்தி வரும் நிலையில் இன்னும் சில வாரங்களில் ஒட்டுமொத்த படப்பிடிப்பும் முடிவடைந்து போஸ்ட் ப்ரொடக்ஷன் வேலைகள் தீவிரமாக நடைபெறும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் லோகேஷ் கனகராஜ் கமல்ஹாசனின் விக்ரம் படத்தை இயக்கி வந்தபோது உலகநாயகனின் பிறந்தநாளை முன்னிட்டு விக்ரம் பட கிலிம்ப்ஸ் வீடீயோவை வெளியிட்டு கமலின் ரசிகர்களை குஷிப்படுத்தினார். எனவே அதுபோல தற்போது விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டும் லியோ படத்தின் கிலிம்ப்ஸ் வீடீயோவை லோகேஷ் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
விக்ரம் திரைப்படம் என்னதான் மிகப்பெரிய வெற்றிப்படம் என்றாலும் அப்படத்திற்கு இருந்த எதிர்பார்ப்பை விட லியோ படத்திற்கு அதிகமாகவே இருந்து வருகின்றது. எனவே லியோ படத்தின் கிலிம்ஸ் வீடீயோவை தளபதியின் பிறந்தநாளை முன்னிட்டு படக்குழு வெளியிட்டால் அது விஜய் ரசிகர்களுக்கு மட்டுமின்றி ஒட்டுமொத்த தமிழ் சினிமா ரசிகர்களுக்கும் விருந்தாக அமையும் என்பதில் எந்த சந்தேகம் இல்லை. எனவே விஜய்யின் பர்த்டே ஸ்பெஷலாக லியோ படத்தின் கிலிம்ப்ஸ் வெளியாகின்றதா என பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும்.