Minus Zero AI based Self Driving Car – இந்தியாவின் முதல் AI அடிப்படையிலான தன்னாட்சி கார் நுட்பம் அறிமுகம்

பெங்களூருவை சேர்ந்த ஸ்டார்ட்-அப் நிறுவனமான மைனஸ் ஜீரோ, இந்தியாவின் முதல் தன்னாட்சி வாகனம் எனப்படுகின்ற zPod மாடலை வெளியியிட்டுள்ளது. இந்த zPod செயற்கை நுண்ணறிவு (AI- aritifical intelligence) உதவியுடன் உருவாக்கப்பட்ட முழுமையான செல்ஃப் டிரைவிங் தொழில்நுட்பத்தை பெற்றதாக விளங்குகின்றது.

மைனஸ் ஜீரோ நிறுவனம் வாகன உற்பத்தியாளர் அல்ல, மாறாக இது ஒரு தொழில்நுட்பத்தை வழங்கும் நிறுவனமாகும். மற்ற வாகன உற்பத்தியாளர்களுக்கு, Level 5 ADAS நுட்பத்தை மேம்படுத்த உதவும் வகையில் தன்னாட்சி ஓட்டுநர் தொழில்நுட்பத்தை மேம்படுத்தவதற்கு செயற்கை அறிவாற்றலுடன் வழங்க உள்ளது.

Minus Zero AI based Autonomous Vehicle

மைனஸ் ஜீரோ உருவாக்கியுள்ள தொழில்நுட்பத்தின் நோக்கம், போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்தவது, சாலை விபத்துக்கள் மற்றும் தொடர்புடைய இறப்புகளை முழுமையாக குறைப்பதாகும்.

மற்ற தன்னாட்சி வாகனங்களைப் போலல்லாமல், zPod ஆனது LIDAR (ஒளி கண்டறிதல் மற்றும் வரம்பு) பயன்பாட்டைப் பயன்படுத்துவதில்லை. அதற்கு, மாற்றாக ஆறு கேமராக்களை பயன்படுத்துகிறது. நான்கு பக்கங்களிலும் மற்றும் இரண்டு முன் மற்றும் பின்புறத்திலும் உள்ளது.

இந்நிறுவனம் வெளிப்படுத்தியுள்ள உண்மையான பார்வை தன்னாட்சி கருத்தையும் காட்சிப்படுத்தியது. இதில் தடைகளை வழிநடத்த மேற்கூறிய கேமராக்களை அதன் சென்சார்களையும் பயன்படுத்துகிறது. மைனஸ் ஜீரோ கூறும் கருத்து, தற்போதுள்ள எந்த வாகனத்திற்கும் ஏற்ற வகையிலும் மாற்றியமைக்கலாம்.

minus zero

மைனஸ் ஜீரோ கூற்றுப்படி, தன்னாட்சி ஓட்டுநர் தொழில்நுட்பம் தற்பொழுது பயன்பாட்டில் இருக்கின்ற எலக்ட்ரிக் அல்லது ICE என அனைத்து கார்களுக்கு பொருத்தலாம் என குறிப்பிட்டுள்ளது. எனவே, இது மிகப்பெரிய வரப்பிரசாதமாக பார்க்கப்படுகின்றது.

தன்னாட்சி வாகனங்களின் எதிர்கொள்ளும் சில முக்கிய பிரச்சனைகளுக்கு தீர்வு காண Nature Inspired AI (NIA) என்ற மனித மூளை செயல்பாட்டினை போன்று இயற்பியல் சார்ந்த விழிப்புணர்வு மற்றும் முன்கூட்டி கணித்து முடிவெடுக்கும் திறனை கொண்டதாக விளங்கும் என்று மைனஸ் ஜீரோ குறிப்பிடுகின்றது.

இந்நிறுவனம் காட்சிப்படுத்தியுள்ள ZPod கான்செப்ட்டில் உள்ள தன்னாட்சி நிலை 5 அடிப்படையில் AI தொழில்நுட்பத்துடன், நிஜ உலகில் வாகனத்தை எவ்வித மனித தலையீடும் இல்லாமல் சுயமாக ஓட்டும் என குறிப்பிட்டுள்ளது. இந்த மாடல் விற்பனைக்கு வரவாய்ப்பில்லை.

இந்நிறுவனம், Level 5 ADAS தொழில்நுட்பங்களை மற்ற கார் தயாரிப்பாளர்களுக்கு வழங்கவும், மேம்படுத்தவும், பழைய வாகனங்களில் பொருத்தவும் வழிவகுக்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.