இந்தியாவில் FAME-II மானியம் குறைக்கப்பட்டதை தொடர்ந்து ஓகாயா எலக்ட்ரிக் வாகனங்களின் விலை ரூ.26,000 வரை உயர்ந்துள்ளது. குறிப்பாக ஓகாயா ஃபாஸ்ட் F4 மாடலின் புதிய விலை ₹ 1,39,951 ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஓகாயா நிறுவனத்தின் ஃபாஸ்ட் எஃப்4, ஃபாஸ்ட் எஃப்3, ஃபாஸ்ட் எஃப்2பி மற்றும் ஃபாஸ்ட் எஃப்2டி ஆகிய நான்கு மாடல்களின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழ்நாட்டின் பல்வேறு மாநகரங்ளில் கிடைக்கின்றது. மே 2023-ல் முதன்முறையாக இந்நிறுவனம் 3875 எண்ணிக்கையை விற்பனையில் கடந்துள்ளது.
Okaya escooter Price hike
அதிகபட்சமாக 60-70kmph வேகத்தில் பயணிக்கும் திறனை கொண்ட ஃபாஸ்ட் F3 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 3.53 Kwh லித்தியம் ஃபெரோஸ் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 120km வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பாக ₹ 104,999 இருந்த விலை உயர்த்தப்பட்டு ஓகாயா Faast F3 விலை ₹ 1,29,948 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
70kmph வேகத்தை பெற்ற ஃபாஸ்ட் F2B பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2.2 Kwh லித்தியம் ஃபெரோஸ் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 80km வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பு ₹ 94,999 இருந்த விலை உயர்த்தப்பட்டு ஓகாயா Faast F2B விலை ₹ 1,10,745 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
70kmph வேகத்தை பெற்ற ஃபாஸ்ட் F2T பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் 2.2 Kwh லித்தியம் ஃபெரோஸ் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 80km வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பாக ₹ 91,999 இருந்த விலை உயர்த்தப்பட்டு ஓகாயா Faast F2T விலை ₹ 1,07,903 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
70kmph வேகத்தை பெற்ற ஃபாஸ்ட் F4 பேட்டரி எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல்4.4 Kwh லித்தியம் ஃபெரோஸ் பாஸ்பேட் பேட்டரி பொருத்தப்பட்டுள்ளது. முழுமையான சிங்கிள் சார்ஜில் 140-160km வழங்கும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்பாக ₹ 1,13,999 இருந்த விலை உயர்த்தப்பட்டு ஓகாயா Faast F4 விலை ₹ 1,39,951 ஆக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
சமீபத்தில் FAME 2 மானியம் ஒரு KWh பேட்டரிக்கு ரூ.15,000 ஆக இருந்ததை ரூ.10,000 ஆக குறைத்தது குறிப்பிடதக்கதாகும்.
மேலும் படிக்க – ஓலா, சேட்டக், ஏதெர், விடா விலை உயர்வு பட்டியல்