வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
ஸ்ரீநகர்:நீண்ட சட்டப் போராட்டத்துக்குப் பின், ஜம்மு – காஷ்மீர் முன்னாள் முதல்வர் மெஹபூபா முப்திக்கு, 10 ஆண்டுகளுக்கு செல்லுபடியாகும் ‘பாஸ்போர்ட்’ வழங்கப்பட்டுள்ளது.
வீட்டுச் சிறை@
@
ஜம்மு – காஷ்மீர் தனி மாநிலமாக இருந்த போது, அம்மாநிலத்துக்கு இந்திய அரசியல் சாசனத்தின் 370வது பிரிவு சிறப்பு அந்தஸ்து வழங்கப்பட்டது.
கடந்த 2019ல் இந்த சிறப்பு அந்தஸ்து பிரிவை மத்திய அரசு ரத்து செய்தது.
அப்போது அம்மாநில முன்னாள் முதல்வர்கள் பரூக் அப்துல்லா, ஒமர் அப்துல்லா, மெஹபூபா முப்தி உள்ளிட்ட பலர் கைது செய்யப்பட்டு, வீட்டுச் சிறையில் வைக்கப்பட்டனர்.
இதில், பெரும்பாலான தலைவர்கள் ஓராண்டுக்குப் பின் விடுவிக்கப்பட்டனர்.
இந்நிலையில், மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான மெஹபூபா மற்றும் அவரது தாயின் பாஸ்போர்ட்கள் 2021ல்முடக்கப்பட்டன.
இவற்றை எதிர்த்து ஜம்மு – காஷ்மீர் மற்றும் புதுடில்லி உயர் நீதிமன்றங்களில் மெஹபூபா முறையிட்டார்.
தன், 80 வயது தாயை இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்கா அழைத்துச் செல்ல வேண்டி உள்ளதால், பாஸ்போர்ட் வழங்க உத்தரவிடும்படி, வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கரிடமும் வலியுறுத்தினார்.
மூன்று மாதம்
இது தொடர்பாக மூன்று மாதங்களில் உரிய முடிவெடுக்க, பாஸ்போர்ட் அலுவலக அதிகாரிகளுக்கு புதுடில்லி உயர் நீதிமன்றம் கடந்த மார்ச்சில் உத்தரவிட்டது.
இதையடுத்து மெஹபூபாவுக்கு 2033ம் ஆண்டு வரை செல்லு படியாகும் பாஸ்போர்ட் வழங்கப்பட்டு உள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement