ஐதராபாத் : நடிகர் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள படம் சலார். கேஜிஎப் இயக்குநர் பிரஷாந்த் நீல் இந்தப் படத்தை இயக்கியுள்ளார்.
கேஜிஎப் 2 படத்தை தொடர்ந்து சலார் படத்தை பிரஷாந்த் நீல் இயக்கி முடித்துள்ளார். பிரபாசுக்கு இந்தப் படத்தில் ஜோடியாகியுள்ளார் ஸ்ருதிஹாசன்.
இந்தப் படம் செப்டம்பர் மாதத்தில் ரிலீசாகவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளன. தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக இந்தப் படம் வெளியாகவுள்ளது.
இயக்குநர் பிரஷாந்த் நீல் பிறந்தநாள் ஸ்பெஷல் வீடியோ வெளியீடு : கேஜிஎப் படங்களின் மூலம் சர்வதேச அளவில் கவனத்தை பெற்றுள்ளார் இயக்குநர் பிரஷாந்த் நீல். கேஜிஎப் 2 படத்தை தொடர்ந்து பிரஷாந்த் நீல் தற்போது பிரபாஸ் லீட் கேரக்டரில் நடித்துள்ள சலார் படத்தை இயக்கி முடித்துள்ளார். இந்தப் படத்தில் பிரபாசுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் ஜோடியாகியுள்ளார். ஹம்பாலே பிலிம்ஸ் நிறுவனம் இந்தப் படத்தை மிகவும் பிரம்மாண்டமான அளவில் தயாரித்துள்ளது. இந்தப் படம் செப்டம்பர் மாதத்தில் இந்திய அளவில் தமிழ், தெலுங்கு என பான் இந்தியா படமாக வெளியாகவுள்ளது.
படத்தில் பிரித்விராஜ், ஜெகபதி பாபு, ஈஸ்வரி ராவ், மது குருசாமி உள்ளிட்டவர்களும் லீட் கேரக்டர்களில் நடித்துள்ளனர். 400 கோடி ரூபாய் பட்ஜெட்டில் இந்தப் படம் உருவாக்கப்பட்டுள்ளது. இத்தாலியின் மடேரா உள்ளிட்ட பகுதிகளில் இந்தப் படத்தின் முக்கியமான காட்சிகள் எடுக்கப்பட்டுள்ளன. அதிரடி ஆக்ஷன் த்ரில்லர் படமாக இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது. இந்தப் படம் பிரஷாந்தின் சினிமாட்டிக் யூனிவர்ஸ் என்று கூறப்பட்டுள்ளது.
மேலும் பிரஷாந்தின் முதல் படமான உக்ரம் கன்னட படத்தின் ரீமேக் என்றும் தகவல்கள் வெளியாகின. ஆனால் இந்த விஷயத்தை முந்தைய பேட்டியில் பிரஷாந்த் நீல் மறுத்திருந்தார். தான் இயக்கும் படங்களில் உக்ரம் படத்தின் சாயல் இருக்கும் என்றும் அது தன்னுடைய ஸ்டைல் என்றும் கூறியிருந்த அவர், ஆனால் சலார் படம் உக்ரம் படத்தின் ரீமேக் இல்லை என்றும் முற்றிலும் மாறுபட்ட புதிய கதை என்றும் அவர் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் இன்றைய தினம் பிரஷாந்த் நீல் தன்னுடைய பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இதையடுத்து படத்தின் படப்பிடிப்பு தள வீடியோவை படக்குழுவினர் வெளியிட்டுள்ளனர். இதில் உக்கிரமான பிரபாசின் புகைப்படங்களை பார்க்க முடிகிறது. அதேபோல மிகவும் சீரியசான கதைக்களங்களை தன்னுடைய படங்களுக்காக இயக்கிவரும் பிரஷாந்த் நீல், சூட்டிங் ஸ்பாட்டில் மிகவும் எளிமையாக, மகிழ்ச்சியாக காணப்படுகிறார்.
#Salaar BTS Video👌🥵
Director Prashanth Neel Birthday special 💥pic.twitter.com/0q2g46bW9G— AmuthaBharathi (@CinemaWithAB) June 4, 2023
இந்த வீடியோவின் இடையிடையே, பிரஷாந்த் நீல் குறித்த வாசகங்களையும் காண முடிகிறது. எல்லையில்லாத கற்பனை வளத்தை கொண்டவர் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் இந்த வீடியோவில் பிரபாஸ், ஸ்ருதிஹாசன் உள்ளிட்டவர்களுக்கு காட்சிகளை விளக்கும் வகையிலும் பிரஷாந்த் நீல் காணப்படுகிறார். கிரிக்கெட் ஆடுகிறார். பலவிதமான முக பாவனைகளை அவர் காட்சிகளாக விவரிப்பதாகவும் இந்த வீடியோ அமைந்துள்ளது.