சென்னை : முண்டாசுப்பட்டி, ராட்சசன் படங்களை இயக்கிய ராம்குமாருடன் மூன்றாவது முறையாக விஷ்ணு விஷால் புதிய படத்தில் நடிக்கவுள்ளார்.
இந்தப் படம் ராட்சசன் படத்தின் இரண்டாவது பாகமாக உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தப் படத்தின் சூட்டிங் குறித்த அப்டேட் தற்போது வெளியாகியுள்ளது.
முன்னதாக தனுஷை வைத்து ராம்குமார் ஒரு படத்தை இயக்கவுள்ளதாக கூறப்பட்ட நிலையில், கடந்த 4 ஆண்டுகளாக அந்தப் படத்தின் அறிவிப்பு மேற்கொள்ளப்படவில்லை.
மீண்டும் இணையும் ராட்சசன் கூட்டணி : நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் இயக்குநர் ராம்குமார் கூட்டணியில் கடந்த 2014ம் ஆண்டில் வெளியான படம் முண்டாசுப்பட்டி. இந்தப் படம் வித்தியாசமான திரைக்கதையுடன் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. விஷ்ணு விஷால் கேரியரில் பெஸ்டாக அமைந்தது. இந்தப் படத்தை தொடர்ந்து இதே கூட்டணியில் மீண்டும் கடந்த 2018ம் ஆண்டில் வெளியானது ராட்சசன். த்ரில்லர் ஜானரில் எடுக்கப்பட்டிருந்த இந்தப் படமும் சூப்பர் டூப்பர் ஹிட்டடித்தது.
ராட்சசன் படம் மீண்டும் விஷ்ணு விஷால் கேரியரில் பெஸ்ட்டாக அமைந்தது. இந்தப் படத்தின் திரைக்கதை உள்ளிட்டவை ரசிகர்களை மிகவும் கவர்ந்தது. சீட்டின் நுனியில் ரசிகர்களை சில காட்சிகள் அமரச் செய்தது. பெண்ணை பெற்றவர்கள் ஒவ்வொருவருக்கும் இந்தப் படம் கலக்கத்தை ஏற்படுத்தியது. இந்தப் படம் ராம்குமாருக்கு சிறந்த இயக்குநர் அந்தஸ்தை பெற்றுத் தந்தது. தொடர்ந்து அவர் தனுஷை வைத்து ஒரு படம் இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.
ஆனால் 4 ஆண்டுகள் கடந்த நிலையில், அந்தப் படத்தின் அறிவிப்பு எதுவும் மேற்கொள்ளப்படவில்லை. இந்நிலையில் மீண்டும் விஷ்ணு விஷாலை ராம்குமார் இயக்கவுள்ளார். ராட்சசன் படத்தின் இரண்டாவது பாகமாக இந்தப் படம் உருவாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்தப் படமும் சிறப்பான வெற்றியை பெற்று இந்தக் கூட்டணிக்கு ஹாட்ரிக் வெற்றியை தரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எப்ஐஆர் படத்தை தொடர்ந்து தற்போது மோகன்தாஸ் என்ற படத்தில் விஷ்ணு விஷால் நடித்து வருகிறார்.
இந்நிலையில் இந்தப் படத்தை தொடர்ந்து ராம்குமார் இயக்கத்தில் அவர் இணையவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே இந்தப் படத்தின் முதல்கட்ட சூட்டிங் கொடைக்கானலில் அடுத்த மாதம் துவங்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்தப் படத்தில் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக அதிதி ஷங்கர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சத்யஜோதி பிலிம்ஸ் இந்தப் படத்தை தயாரிக்கவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
பலே பாண்டியா, முண்டாசுப்பட்டி, இன்று நேற்று நாளை போன்ற வித்தியாசமான கதைக்களங்களில் நடித்த விஷ்ணு விஷால், வேலைன்னு வந்துட்டா வெள்ளைக்காரன் படத்தின்மூலம் தயாரிப்பாளராகவும் களமிறங்கினார். தொடர்ந்து அடுத்தடுத்த படங்களை தயாரித்து வருகிறார். இந்நிலையில் தற்போது மோகன்தாஸ், ஆரியன் மற்றும் லால் சலாம் ஆகிய படங்களில் நடித்து வருகிறார் விஷ்ணு விஷால். இதில் லால் சலாம் படத்தில் நடிகர் ரஜினிகாந்த்துடன் இவர் இணைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.