ஜெய்ப்பூர்: எங்கேயும் எப்போதும், கணம் உள்ளிட்ட படங்களில் நடித்து ரசிகர்களை கவர்ந்த நடிகர் சர்வானந்த் திருமணம் இன்று கோலாகலமாக நடைபெற்றது.
ரக்ஷிதா ரெட்டி என்பவரை காதலித்த சர்வானந்த்தின் நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்னதாக நடைபெற்றது. கூடிய விரைவில் திருமணம் நடைபெறும் என திருமண வேலையில் நடிகர் சர்வானந்த் பிசியாக இருந்தார்.
சில நாட்களுக்கு முன்னதாக திடீரென எதிர்பாராத விதமாக அவர் சென்ற கார் விபத்தில் சிக்கியதில் சர்வானந்துக்கு காயம் ஏற்பட்டது.
திருமணம் நடக்குமான்னே சந்தேகம்: கடந்த மே 28ம் தேதி ஹைதராபாத் நகரின் ஃபிலிம் நகர் ஜங்ஷன் அருகே காரில் வந்துக் கொண்டிருந்த போது கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்த நிலையில், சாலையின் ஓரம் மோதி விபத்தில் சிக்கியது.
இந்த விபத்தில் நடிகர் சர்வானந்துக்கு லேசான காயம் ஏற்பட்டது. உடனடியாக அங்கு குவிந்த பொதுமக்கள் சர்வானந்தை மருத்துவமனையில் சேர்த்தனர். திருமணத்துக்கு 5 நாட்கள் முன்னதாக இப்படியொரு விபத்து நடந்த நிலையில், அவரது திருமணம் நடக்குமா? தள்ளிப் போகுமா? என கேள்விகள் கிளம்பின.
கோலாகலமாக நடைபெற்ற திருமணம்: கடந்த ஜனவரி 26ம் தேதி தனது காதலி ரக்ஷிதா ரெட்டியை நிச்சயம் செய்துக் கொண்ட எங்கேயும் எப்போதும் நடிகர் சர்வானந்த் ஜூன் 3ம் தேதி இரவு 11 மணிக்கு ஜெய்ப்பூரில் உள்ள பழம்பெரும் அரண்மனையில் பிரம்மாண்டமாக தனது திருமணத்தை செய்துள்ளார்.
தனது காதலி ரக்ஷிதா ரெட்டியின் கழுத்தில் தாலி கட்டிய சர்வானந்தின் திருமண புகைப்படங்கள் தற்போது வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகின்றன.
மணக்கோலத்தில் செம மாஸ்: நடிகர் சர்வானந்த் மற்றும் அவரது காதலி ரக்ஷிதா ரெட்டி இருவரும் திருமணக் கோலத்தில் ராஜ உடையில் செம அழகாக அணிகலன்களுடன் ஜொலித்த புகைப்படங்கள் தற்போது வெளியான நிலையில், ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்கள் என பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
#Sharwanand ஹாஷ்டேக்கில் சர்வானந்த் திருமண புகைப்படங்களும் திருமணத்தில் கலந்து கொண்ட பிரபலங்களின் புகைப்படங்களும் டிரெண்டாகி வருகின்றன.
ராம்சரண் பங்கேற்பு: டோலிவுட் நடிகர் சர்வானந்தின் திருமண நிகழ்ச்சியில் பல முன்னணி நடிகர்கள் பிரபலங்கள் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். ஆர்ஆர்ஆர் படத்தின் மூலம் சர்வதேச கவனத்தை ஈர்த்த நடிகர் ராம்சரண் திருமண விழாவில் கலந்து கொண்ட போட்டோக்களும் இணையத்தில் அதிவேகமாக ஷேர் செய்யப்பட்டு வருகின்றன.