சென்னை: நடிகர் சித்தார்த் மற்றும் குத்தாட்ட நடிகை சூர்யபிரபா இணைந்து டக்கர் படத்தின் ப்ரமோஷனுக்காக சமீபத்தில் வெளியிட்டுள்ள நடன வீடியோ ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
இன்ஸ்டாகிராமில் கவர்ச்சி போட்டோக்களையும் வீடியோக்களையும் பதிவிட்டு வரும் சூர்யபிரபா சமீபத்தில் மன்சூர் அலி கான் உடன் சரக்கு படத்தில் குத்தாட்டம் போட்டிருந்தார்.
இந்நிலையில், சித்தார்த் உடன் அவர் ஆட்டம் போட்ட வீடியோவை இன்ஸ்டாகிராமில் ஷேர் செய்த நிலையில், ஏகப்பட்ட டபுள் மீனிங் கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன.
சித்தார்த்தின் டக்கர் படம் ரிலீஸ்: இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யன்ஷா கெளசிக், முனீஷ்காந்த், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகி உள்ள டக்கர் படம் வரும் ஜூன் 9ம் தேதி ரிலீஸ் ஆகிறது.
சித்தார்த் நடிப்பில் வெளியான பல படங்கள் சொதப்பிய நிலையில், கம்பேக்கிற்காக நீண்ட நாட்களாக காத்திருக்கிறார். கமர்ஷியல் படமான டக்கர் படத்திற்கான ப்ரமோஷன் பணிகளில் கடந்த சில வாரங்களாக தீவிரம் காட்டி வருகிறார் சித்தார்த்.
சூர்யபிரபாவுடன் டான்ஸ்: இந்நிலையில், சமீபத்தில் சரக்கு படத்தில் குத்தாட்டம் போட்ட இளம் நடிகை சூர்யபிரபாவுடன் சித்தார்த் போட்டுள்ள டக்கர் டான்ஸ் வீடியோவை சூர்யாபிரபா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
சூர்யபிரபாவுடன் சித்தார்த் தாறுமாறாக ஆடியதை பார்த்த ரசிகர்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர். பல முன்னணி நடிகைகளுடன் ஆட்டம் போட்ட மனுஷன் கடைசியில் இப்படி ஆகிட்டாரே என கலாய்த்தும் வருகின்றனர்.
குலுங்க குலுங்க டான்ஸ்: சித்தார்த் உடன் ஆட்டம் போட்ட சந்தோஷத்தில் தற்போது சோலோவாக அரக்கு நிற புடவையில் ரோட்டில் குலுங்க குலுங்க செம குத்தாட்டம் போட்டுள்ளார் சூர்யபிரபா.
அவரது இடையழகு தனியாக தெரிய அதை பார்த்த ரசிகர்கள் டபுள் மீனிங் கமெண்டுகளை போட்டுத் தாக்கி வருகின்றனர்.
அதிதி ராவ் பார்த்தா?: நடிகர் சித்தார்த்தும் அவரது ரூமர் கேர்ள் ஃபிரெண்ட் அதிதி ராவும் பல இடங்களில் டேட்டிங் செய்து வரும் நிலையில், அதிதி ராவின் போஸ்ட்டுக்கு எல்லாம் முதல் ஆளாக சித்தார்த் கமெண்ட் போட்டு வரும் நிலையில், சூர்யபிரபாவுடன் இப்படியொரு குத்தாட்டத்தை சித்தார்த் ஆடியிருப்பதை அதிதி பார்த்தால் என்ன ஆகும் என ரசிகர்கள் கமெண்ட் போட்டு கலாய்த்து வருகின்றனர்.
மேலும், நடிகர் சித்தார்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சூர்யபிரபாவுடன் நடனமாடிய வீடியோவை ஷேர் செய்யாத நிலையில், மேலும், ரசிகர்கள் அவரை ட்ரோல் செய்து வருகின்றனர்.