வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: ஒடிசாவின் பாலசோர் மாவட்டத்தில் ரயில் விபத்திற்கு தொழில்நுட்ப கோளாறே காரணம் என ரயில்வே வாரியம் தெரிவித்து உள்ளது.
இது தொடர்பாக ரயில்வே வாரிய உறுப்பினர் ஜெயா வர்மா சின்ஹா கூறியதாவது: ரயில் விபத்திற்கு சிக்னலில் பிரச்னை இருந்தது முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. ரயில்வே பாதுகாப்பு அதிகாரியின் விரிவான விசாரணைக்கு காத்திருக்கிறோம். கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மட்டுமே விபத்துக்குள்ளானது. மணிக்கு 128 கி.மீ., வேகத்தில் பயணித்த இந்த ரயிலுக்கு தான் அதிக பாதிப்பு ஏற்பட்டு உள்ளது.
சரக்கு ரயில் தடம் புரளவில்லை. இதில் இரும்பு தாதுக்கள் ஏற்றி வந்ததால் தான், கோரமண்டல் எக்ஸ்பிரசுக்கு அதிக பாதிப்பும், அதிக உயிரிழப்பு, காயமும் ஏற்பட்டது. இந்த ரயில் பெட்டிகள் டவுன் லைனில் தடம் புரண்டு, மணிக்கு 126 கி.மீ., வேகத்தில் வந்த யஷ்வந்த்பூர் எக்ஸ்பிரசின் கடைசி இரண்டு பெட்டிகள் மீது மோதியது.
பாதிக்கப்பட்டவர்கள் 139 என்ற உதவி எண்ணை தொடர்பு கொள்ளலாம். ரயில்வே அதிகாரிகள் பதில் அளிப்பார்கள். விபத்திற்கான காரணத்தை கண்டுபிடித்துவிட்டோம். ஆனால், அது சிக்கல் ஆனது. பெரிய காயம் அடைந்தவர்களுக்கு நிவாரணமாக தலா ரூ.2 லட்சம் இழப்பீடாக வழங்கப்படும். லேசான காயம் 50 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement