தமிழ்நாடு
ஒடிசாவில் நிகழ்ந்த ரயில் விபத்தில் காயமடைந்த தமிழகப் பயணிகளை ஏற்றிக் கொண்டு சிறப்பு ரயில் இன்று காலை சென்னை சென்ட்ரல் வந்தடைந்தது.ஒடிசாவில் இருந்து 137 பேர் சென்னை வந்த நிலையில், 8 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.பாலசோர் ரயில் விபத்தில் இருந்து தப்பிய பயணிகள் தங்கள் அதிர்ச்சியூட்டும் அனுபவங்களை ஊடகங்களுக்கு பகிர்ந்து வருகின்றனர்.ரயில் விபத்தில் பாதிக்கப்பட்ட தமிழ்நாட்டை சேர்ந்த பயணிகளுக்கு உரிய உதவிகள் செய்யப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி அளித்துள்ளார்.
ரயில் விபத்து என்ன நடந்தது?
கள்ளக்குறிச்சி புறவழிச் சாலையில் உள்ள மேம்பாலத்தில் சென்னையில் இருந்து கோவை சென்ற தனியார் ஆம்னி பேருந்து சாலையோர தடுப்பில் மோதி கவிழ்ந்த விபத்தில் 20க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.தமிழகத்தில் 17 இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் வாட்டி வதைத்து வருகிறது. 4 ஆண்டுகளுக்கு பின்னர் ஜூன் மாதத்தில் சென்னையில் 109 டிகிரி வெயில் பதிவாகியுள்ளது.நாடாளுமன்ற தேர்தலில் அனைவரும் கட்டாயம் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி ஓசூரில் இருந்து உத்திரமேரூர் வரை சைக்கிள் பாதை யாத்திரை விழிப்புணர்வு பிரசாரத்தை சமூக ஆர்வலர் கருப்பையா மேற்கொண்டுள்ளார்.
இந்தியா
ஒடிசா ரயில் விபத்தில் பலியான நபர்களின் எண்ணிக்கை 294ஆக அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.ஒடிசா அருகே பாலசோர் ரயில் விபத்தில் காயமடைந்து சிகிச்சையில் இருந்த 793 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். 382 பேருக்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.ஒடிசா ரயில் விபத்து நடந்த பஹானாகா ரயில் நிலையத்தில் விடிய விடிய சீரமைப்புப் பணிகள் நடைபெற்று விபத்தில் சேதமடைந்த பெட்டிகள் அப்புறப்படுத்தப்பட்டன.ஒடிசாவில் நடந்த ரயில் விபத்திற்கு அமெரிக்க அதிபர் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளார். இதுதொடர்பான பதிவில், இதயம் நொறுங்கியது. பாதிக்கப்பட்ட நபர்களுக்காக பிரார்த்தனை செய்கிறேன். அமெரிக்க மக்கள் அனைவரும் எங்களின் இரங்கலை தெரிவித்துக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
ஒடிசா ரயில் விபத்திற்கு பொறுப்பேற்று மத்திய ரயில்வேத் துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சி தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.மத்திய ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் அளித்த பேட்டியில், ஒடிசாவில் விபத்தில் சிக்கிய ரயில் பயணிகள் பலரும் பத்திரமாக அவரவர் வீடுகளுக்கு சென்றடைந்து விட்டனர். வரும் புதன்கிழமை காலை முதல் வழக்கமான வழிகளில் ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவித்தார்.ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்த நபர்களின் உடல்களை அவர்களின் சொந்த ஊர்களுக்கு எடுத்து செல்ல உதவி செய்யுமாறு விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து துறை அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.
வர்த்தகம்
சென்னையில் 379வது நாளாக பெட்ரோல், டீசல் விலையில் மாற்றம் இல்லை. ஒரு லிட்டர் பெட்ரோல் 102.63 ரூபாய்க்கும், டீசல் விலை 94.24 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
விளையாட்டு
கிரிக்கெட் வீராங்கனை உத்கர்ஷாவை சி.எஸ்.கே வீரர் ருத்ராஜ் கெய்க்வாட் திருமணம் செய்து கொண்டார்.
சினிமா
மறைந்த பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியன் 77வது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.