Vijay: நீங்க என்னை வேண்டாம் என சொன்னதை நான் மறக்கவே இல்லை சார்..முன்னணி இயக்குனரை ஷாக்காகிய தளபதி..!

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தற்போதைய சூழலில் இந்திய திரையுலகில் டாப் ஹீரோவாக வலம் வருபவர் தான் தளபதி விஜய். படத்திற்கு படம் வசூலில் சாதனை படைத்து வசூல் சக்ரவர்த்தியாக திகழ்கின்றார் விஜய். எனவே இவரின் கால்ஷீட்டிற்காக பல தயாரிப்பாளர்கள் தவம் இருக்கின்றனர்.

சம்பளம் எவ்வளவு இருந்தாலும் அதனை தர தயாரிப்பாளர்கள் முன்வருகின்றனர். அந்த வகையில் தற்போது AGS நிறுவனம் விஜய்க்கு 200 கோடி சம்பளமாக கொடுத்து தளபதி 68 படத்திற்காக புக் செய்துள்ளது. தற்போது லியோ படத்திற்காக விஜய் 175 கோடி வரை சம்பளமாக வாங்கும் நிலையில் தற்போது தன் 68 ஆவது படத்திற்காக 200 கோடி சம்பளமாக வாங்குகிறார்.

Leo: தளபதி பர்த்டே ஸ்பெஷல்..லியோ படக்குழு வெளியிடப்போகும் சர்ப்ரைஸ்..ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான்..!

இப்படத்தை வெங்கட் பிரபு இயக்க யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க இருக்கின்றார். இதற்கடுத்து தளபதி விஜய்யின் அடுத்த படத்தை இயக்க பல தயாரிப்பாளர்கள் போட்டிபோட்டு வருகின்றனர். அதில் சூப்பர் குட் பிலிம்ஸ் நிறுவனமும் ஒன்று. இந்நிலையில் இன்று விஜய்யின் படத்தை தயாரிக்கவும் இயக்கவும் பலர் போட்டிபோட்டு வரும் நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு விஜய்யை வேண்டாம் என ஒரு இயக்குனர் நிராகரித்ததாக தகவல் வந்துள்ளது.

அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்

அதாவது விஜய்யின் ஆரம்பகாலகட்டத்தில் ஒரு வெற்றிப்படத்திற்காக போராடி வந்தார். அந்த சமயத்தில் விஜய்யின் தந்தையும் இயக்குனருமான எஸ்.ஏ,சந்திரசேகர் விஜய்யை இயக்குனர் பாரதிராஜாவிடம் அழைத்து சென்று உங்களின் இயக்கத்தில் விஜய் நடிக்கவேண்டும். அவ்வாறு நடித்தால் நன்றாக இருக்கும்.

விஜய்யின் திரைப்பயணத்தில் அது முக்கியமான படமாக இருக்கும் என எஸ்.ஏ சந்திரசேகர் பாரதிராஜாவிடம் கேட்டுக்கொண்டார். ஆனால் பாரதிராஜா ஏதேதோ காரணம் சொல்லி விஜய்யை இயக்க மறுத்தார். இதையடுத்து சில ஆண்டுகளுக்கு முன்பு பாரதிராஜா விஜய்யை சந்தித்த போது இதை கூறியுள்ளார்.

உடனே விஜய், நான் அதை மறக்கவே இல்லை சார் என சிரித்துக்கொண்டே கூறியுள்ளார். இதனை பாரதிராஜா சமீபத்தில் ஒரு பேட்டியில் கூறியுள்ளார். இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன்பு கூட விஜய்யை இயக்கும் வாய்ப்பை தவறவிட்டதாக கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.