சென்னை: லால் சலாம் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை பகிர்ந்து ஐஸ்வர்யா நெகிழ்ச்சியான பதிவு ஒன்றை ஷேர் செய்துள்ளார்.
நடிகர் தனுஷை விட்டு பிரிந்த ஐஸ்வர்யா தற்போது இயக்கத்தில் கவனம் செலுத்தி வருகிறார்.
அண்மையில் இவர் பயணி என்ற ஆல்பம் பாடலை, தமிழ்,தெலுங்கு,மலையாளம், இந்தி மொழியில் இயக்கி இருந்தார்.
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் : சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த், தனுஷ் மற்றும் ஸ்ருதி ஹாசனை வைத்து த்ரி என்ற படத்தை இயக்கி இருந்தார். வித்தியாசமான கதை அம்சத்தைக் கொண்ட இப்படம் ஓரளவு வரவேற்பு கிடைத்தது. இந்த படத்தைத் தொடர்ந்து கௌதம் கார்த்தியை வைத்து வை ராஜா வை என்ற படத்தை இயக்கினார். இந்த படத்திற்கு பிறகு படங்கள் இயக்காமல் இருந்த ஐஸ்வர்யா, தனுஷுடனான பிரிவுக்கு பிறகு லால் சலாம் என்ற படத்தை இயக்கி வருகிறார்.
லால் சலாம் : லைகா நிறுவனம் தயாரிக்கும் லால் சலாம் படத்தில் நடிகர்கள் விஷ்ணுவிஷால், விக்ராந்த் ஆகியோர் கதாநாயகர்களாக நடிக்கின்றனர். இந்த படத்தின் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே திருவண்ணாமலை மற்றும் மும்பையில் நடந்து முடிந்துள்ளது. அதனைத் தொடர்ந்து தற்போது புதுவை மற்றும் கடலூரில் உள்ள ரோடியர் மில் பழைய வளாகத்தில் இரண்டு நாட்களாக படப்பிடிப்பு நடந்து வருகிறது
விறுவிறுப்பான படப்பிடிப்பு : இதன் முதல்கட்ட படிப்பிடிப்பு ஏற்கனவே மும்பை, திருவண்ணாமலையில் நடந்து முடிந்துள்ளது. தற்போது இரண்டாம் கட்ட படப்பிடிப்பு பாண்டிச்சேரியில் நடந்து வருகிறது. இதைத் தெரிந்து கொண்ட ரசிகர்கள் படப்பிடிப்பு தளத்திற்கு படையெடுத்து வந்ததால், அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
அதிகமாக நேசிக்கிறேன் அப்பா : இந்நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், தனது தந்தையுடன் காரில் இருப்பது போன்று ஒரு புகைப்படத்தை பகிர்ந்து. அதில், உருக்கமான பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதில், உங்களை பார்த்து வளர்ந்தேன், ஆனால் உங்களை வைத்து படம் இயக்குவேன் என்று ஒருநாளும் நினைத்துக் கூட பார்த்ததில்லை. உங்களுடன் சேர்ந்து இந்த உலகத்தை பார்க்கிறேன். நீங்கள் தான் நான் என்பதை இப்போது உணர்கிறேன். ஒவ்வொரு நாளும், உங்களை நான் அதிகமாக நேசிக்கிறேன் அப்பா என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு இணையத்தில் வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.