‘பிகில்’ படத்தின் மூலம் மக்கள் மனதில் இடம் பிடித்தவர் இந்திரஜா சங்கர். இவர் பிரபல காமெடி நடிகர் ரோபோ சங்கரின் மகள். இவர் எப்போதும் சமூகவலைதள பக்கங்களில் ஆக்டிவ் ஆக இருப்பார். அதிலும் கார்த்திக் என்பவருடன் அடிக்கடி ரீல்ஸ்கள் பதிவிட்டு வருவார். மேலும், மாமா என்கிற கேப்ஷனுடன் புகைப்படங்கள், வீடியோக்கள் எனப் பதிவிட்டு வருவார். பலரும், ‘இருவரும் காதலிக்கிறீர்களா?’ எனத் தொடர்ந்து அவர்களிடம் கேள்விகேட்டு வந்த நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக அவருடைய ரசிகர்கள் கேட்ட கேள்விக்கு ரிப்ளை செய்திருக்கிறார் இந்திரஜா. அதுதான் இன்றைய வைரல் டாக்!
கார்த்திக் ‘தொடர்வோம்’ என்கிற தன்னார்வல அறக்கட்டளையை நிறுவி பல குழந்தைகளை வளர்த்து வருகிறார். அவருடைய பூர்வீகம் மதுரைதான். ரோபோ சங்கரும் மதுரையைச் சேர்ந்தவர் என்பது அனைவருக்கும் தெரியும். இருவரும் உறவினர்கள் என்பதால் இது நிச்சயம் பெரியோர்களால் நிச்சயிக்கப்பட்ட திருமணமாக இருக்கலாம் என்கிற கருத்தும் பரவி வருகிறது. கார்த்திக்கிற்கு இயக்குநர் ஆக வேண்டும் என்பதுதான் ஆசையாம். அதனால் இவரும் ஒரு வகையில் திரைத்துறையைச் சேர்ந்தவர்தான். இந்திரஜாவும் தொடர்ந்து நடிப்பிலும், படிப்பிலும் கவனம் செலுத்தி வருகிறார்.
இருவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்தை கார்த்திக் அவருடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அந்தப் பதிவிற்கு கீழே இந்திரஜா, கார்த்திக்கின் ரசிகர் ஒருவர் “நீங்க இந்திரஜாவைத் திருமணம் செய்யப் போறீங்களா?” எனக் கேட்க, அதற்கு கார்த்திக், “ஆமா… தேதி இன்னும் முடிவு பண்ணல. பண்ணதும் சொல்றோம்!” என்று பதில் சொல்ல, இந்திரஜாவும், “இன்னும் தேதி முடிவு பண்ணல. அதிகாரபூர்வமான அறிவிப்பு விரைவில் வரும்! என்னுடைய சந்தோஷத்தை என் ரசிகர்களிடமும், நல விரும்பிகளிடமும் கண்டிப்பாக பகிர்ந்து கொள்வேன்!” என்று பதில் அளித்திருக்கின்றார்.
இந்தப் பதில் மூலமாக இருவரும் திருமணம் செய்து கொள்வது உறுதி என்பது தெளிவாகியுள்ளதால் அவருடைய ரசிகர்கள் பலரும் அவர்களுக்கு வாழ்த்துகள் கூறி வருகின்றனர்.
வாழ்த்துகள் இந்திரஜா – கார்த்திக்!