சென்னை: பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார்.
தமிழ்நாட்டில் கடந்த 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்று வானிலை ஆய்வு மையம் கூறியது. அதேபோல் இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்றும் கடந்த 23ம் தேதி வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது.
வெப்பம்: கடந்த ஒன்றரை மாதமாக இந்தியாவிலும் தமிழ்நாட்டிலும் கோடை வெயில் உச்சத்தை தொட்டது.
தமிழ்நாட்டில் நாளுக்கு நாள் வெப்பநிலை உயர்ந்து வந்தது. முக்கியமாக சென்னையில் வெப்பநிலை உச்சத்தில் உள்ளது.
சென்னையில் ஏற்பட்ட கோடைகாலங்களில் மிக மோசமான ஒரு கோடை காலமாக இந்த மாதம் பார்க்கப்படுகிறது. இந்த மாத தொடக்கத்தில் மழை பெய்த நிலையில் உண்மையான கோடை காலம் கடந்த இரண்டு நாட்களாகத்தான் சென்னையில் நிலவி வருகிறது.
சென்னையில் மக்கள் பகல் நேரங்களில் வெளியே வர முடியாத அளவிற்கு வெப்பநிலை உச்சத்தில் உள்ளது. அதிலும் மாலை 6 மணி வரை கூட வெப்பத்தின் அளவு 40 டிகிரி செல்ஸியஸ் என்ற நிலையில் உள்ளது.
தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 100 டிகிரி பாரன்ஹீட்டை தாண்டி உள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் வெயில் 95 டிகிரி பாரன்ஹீட் வரை சென்றது. சென்னையிலும் 95 டிகிரி பாரன்ஹீட் வரை வெப்பம் நிலவியது.
இந்தியாவின் பல பகுதிகளை இந்த வெப்ப அலை தாக்கி மக்களை கடுமையாக அவதிக்கு உள்ளாக்கியது. இதன் மூலம் வெப்பநிலை 2 டிகிரி செல்ஸியஸ் முதல் 4 டிகிரி செல்ஸியஸ் வரை உயர்ந்து மக்களை சிரமப்பட வைத்தது. . சில இடங்களில் 5 டிகிரி செல்ஸியஸ் வரை கூட வெப்பநிலை உயர்ந்தது.
வெப்ப அலை: இந்த நிலையில், இந்தியாவில் நிலவி வந்த வெப்ப அலை முடிவிற்கு வந்தது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. கடந்த 24ம் தேதியோடு வெப்ப அலை முடிவிற்கு வந்ததாக வானிலை மையம் கூறியது. இனி வெப்பம் படிப்படியாக குறையும் என்றும் வானிலை ஆய்வு மையம் கூறியது.
அவர்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், நாட்டில் வெப்ப அலை முடிவுக்கு வந்துள்ள நிலையில் இன்று முதல் வெப்பநிலை குறையத் தொடங்கும். வட இந்தியாவின் பல்வேறு இடங்களில் கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. மேலும் அடுத்த 2-3 நாட்களுக்கு மலைப்பகுதிகளில் கனமழை பெய்யும் என்று கணித்துள்ளது.
தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும். எப்போதும் ஜூன் முதல் வாரம் தொடங்கும் இந்த மழை இந்த முறை மே இறுதியில் தொடங்க உள்ளது. இந்தியாவில் தென் மேற்கு பருவமழை இன்னும் 2 வாரங்களில் தொடங்கும் என்றும் வானிலை ஆய்வு மையம் கடந்த 23ம் தேதி தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு வானிலை: ஆனால் தமிழ்நாட்டில் இன்னும் மழை தொடங்கவில்லை. தென்மேற்கு பருவமழை இன்னும் முழுமையாக தொடங்கவில்லை. கேரளாவில் இன்னும் மழை ஆரம்பிக்கவில்லை.
இன்னொரு பக்கம் தமிழ்நாட்டில் வெப்பநிலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. தினசரி வெப்பநிலை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. இந்த நிலையில்தான் பருவமழை தொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் முக்கியமான போஸ்ட் ஒன்றை செய்துள்ளார். அதில், மழை காலம் தொடங்குவதில் கால தாமதம் ஏற்பட்டு உள்ளது. கேரளாவில் 9-11 ஜூனில் மழை தொடங்கலாம். அங்கு இதனால் 1-3 நாட்களுக்கு அங்கே மழை பெய்யும்.
அங்கே நல்ல மழை பெய்தபின் அரபிக்கடலில் புயல் சின்னம் உருவாகும். இதனால் காற்றில் இருக்கும் ஈரப்பதத்தை அவை எடுத்துக்கொண்டு இந்திய கடலை விட்டு வெளியே செல்லும் என்று தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் தெரிவித்துள்ளார்.