ஒடிசா ரயில் விபத்து குறித்த சி.பி.ஐ. விசாரணை திசைதிருப்பும் முயற்சி என்று அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே குற்றம் சாட்டியுள்ளார். இதுகுறித்து இன்று அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ரயில்வே பணியாளர்கள் குறைப்பு மற்றும் அறிவிப்போடு நின்று போன நவீன தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார். ஒடிசா மாநிலம் பாலசோரில் நடந்த பயங்கர ரயில் விபத்து தேசத்தையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது, இது இந்திய வரலாற்றில் மிக மோசமான விபத்து. நாட்டில் உள்ள அனைவரையும் வேதனையடையச் […]