புனித மஹிந்த தேரரின் இலங்கை வருகையை நினைவு கூறும் முகமாக ஜனாதிபதி செயலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஐஸ்கிரீம் தன்சல் (03) பிற்பகல் ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக ஆரம்பிக்கப்பட்டது.
இதன்போது ஜனாதிபதியின் செயலாளர் சமன் ஏக்கநாயக்க மக்களுக்கு ஐஸ்கிரீம் வழங்கி தன்சல் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார்.
இந்நிகழ்வில் ஜனாதிபதியின் தொழிற்சங்க பணிப்பாளர் நாயகம் சமன் ரத்னப்பிரியவும் கலந்துகொண்டார்.
நேற்று (04) மாலை 5:00 மணிக்கு அதே இடத்தில் தன்சல் வழங்கப்பட்டது.