மத்தியில் பிரதமர் மோடி தலைமையிலான பாஜக ஆட்சி, கடந்த 2014 மே 26ஆம் தேதி முதல்முறை பொறுப்பேற்றுக் கொண்டது. இதன்மூலம் நாட்டின் 14வது பிரதமராக நரேந்திர மோடி பதவியேற்றார். இதையடுத்து 2019ஆம் ஆண்டில் நடந்த மக்களவை தேர்தலில் வென்று தொடர்ந்து இரண்டாவது முறை பாஜக ஆட்சி அமைத்தது. இந்நிலையில் கடந்த மே 26ஆம் தேதி உடன் பாஜக ஆட்சியின் 9 ஆண்டு காலம் நிறைவு பெற்றது.
அண்ணாமலையை அரவணைக்கும் அமித்ஷா…பாஜகவின் திட்டம் என்ன?
பாஜக ஆட்சியின் 9 ஆண்டுகாலம்
அடுத்த ஆண்டு மக்களவை தேர்தல் வரவுள்ள நிலையில், நடப்பாண்டே பாஜக ஆட்சியின் சாதனைகளை கொண்டாடி தீர்க்க அக்கட்சி மேலிடம் முடிவு செய்தது. அதன்படி, நாடு தழுவிய அளவில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அதில், தமிழகமும் விதிவிலக்கல்ல. சமீபத்தில் நடந்த கர்நாடகா மாநில சட்டமன்ற தேர்தல் பாஜகவிற்கு பெரும் பின்னடைவாக அமைந்தது.
தெற்கில் பின்னடைவு
தெற்கில் தன் வசமிருந்த ஒரே ஒரு மாநிலமும் கைவிட்டு போனது. இதனால் 2024 மக்களவை தேர்தலில் ஆட்சியை பிடிக்க பல்வேறு வியூகங்களை வகுத்து கொண்டிருக்கிறது. அதில் ஒன்றாக நாடாளுமன்ற தொகுதிகளின் எண்ணிக்கையை மக்கள்தொகைக்கு ஏற்ப அதிகரிக்க பாஜக மேலிடம் திட்டமிட்டுள்ளதாக பேச்சு அடிபடுகிறது.
வாக்கு வங்கி
இதுதவிர தெற்கிலும் வாக்கு வங்கி அரசியலில் கவனம் செலுத்த முடிவு செய்துள்ளனர். இவ்வளவு அரசியல் வியூகங்களுக்கு இடையில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, வரும் ஜூன் 8ஆம் தேதி தமிழகம் வருகிறார். அந்த தேதியில் வேலூரில் பாஜகவின் 9 ஆண்டுகால ஆட்சியின் சாதனை விளக்கப் பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.
அமித் ஷா வருகை
இதில் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய இணையமைச்சர் வி.கே.சிங் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர். இதையொட்டி ஜூன் 8ஆம் தேதி பிற்பகல் 3.30 மணிக்கு வேலூரை அடுத்த கந்தநேரிக்கு அமித் ஷா வருகை புரிகிறார். அங்கு நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பாஜக ஆட்சியின் சாதனைகளை விளக்கி பேசுகிறார். இதையடுத்து விசாகப்பட்டினம் புறப்பட்டு செல்வார் எனச் சொல்லப்படுகிறது.
எந்தெந்த தொகுதிகள்
வரும் 2024 மக்களவை தேர்தலில் தமிழகத்தில் 25 தொகுதிகளுக்கு பாஜக குறிவைத்துள்ளது. அதில் 9 தொகுதிகளில் நிச்சயம் வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று காய்களை நகர்த்தி வருகின்றனர். அவை,
கோவைநீலகிரிஈரோடுசிவகங்கைகன்னியாகுமரிசிதம்பரம்ராமநாதபுரம்திருநெல்வேலிவேலூர்
ஆகியவை ஆகும். இவற்றின் மீது டெல்லியின் கவனம் திரும்பியுள்ளது. குறிப்பாக மேற்கு மண்டலத்தில் ஆ.ராசாவை குறிவைத்து எல்.முருகன் மூலம் பாஜக மேலிடம் வியூகங்கள் வகுத்து வருகிறது. இவை எந்த அளவிற்கு எடுபடப் போகிறது என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.