சென்னை: பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில், பள்ளிக்கல்வித்துறை இயக்குநராக முனைவர் க.அறிவொளி நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், தொடக்க கல்வி இயக்குநராக கண்ணப்பன், ஆசிரியர் தேர்வு வாரிய செயலாளராக முனைவர் ராமேஸ்வரமுருகன் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.