பாரீஸ்,
‘கிராண்ட்ஸ்லாம்’ போட்டிகளில் ஒன்றான பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் திருவிழா பாரீஸ் நகரில் நடந்து வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆண்களுக்கான 4வது சுற்று ஆட்டத்தில் நட்சத்திர ஆட்டக்காரர் செர்பியாவின் நோவக் ஜோகோவிச் பெருவியன் வீரர் ஜுவான் பாப்லோ வெரிலாஸை எதிர்கொண்டார்.
இந்த ஆட்டத்தில் ஆரம்பம் முதலே தனது அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய ஜோகோவிச் ஜுவான் பாப்லோவை 6-3, 6-2, 6-2 என்ற செட் கணக்கில் வீழ்த்தினார்.
இதன் மூலம் பிரெஞ்சு ஓபன் டென்னிஸ் தொடரின் காலிறுதி சுற்றுக்கு ஜோகோவிச் முன்னேறி அசத்தினார்.
Related Tags :