ப்பா.. ராஷி கன்னா முதல் ரகுல் ப்ரீத் சிங் வரை.. இந்த வாரம் இன்ஸ்டாவை சூடாக்கிய டாப் 5 நடிகைகள்!

சென்னை: ஜூன் மாதம் தொடங்கியும் சம்மர் ஹாட்னஸ் குறையாத நிலையில், நடிகைகளும் பிகினியை தாண்டி வேற டிரெஸ்ஸே போட மாட்டேன் என அடம்பிடித்து வருகின்றனர்.

இன்ஸ்டாகிராமை திறந்தாலே இளம் நடிகைகளின் கவர்ச்சி காட்டாறு கரன்ட் மீட்டரை போல எக்கச்சக்கமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

இந்நிலையில், இந்த வாரம் இன்ஸ்டாகிராமையும் இளைஞர்கள் இதயத்தையும் சூடாக்கிய டாப் 5 நடிகைகளின் ஹாட் போட்டோக்களை இங்கே பார்க்கலாம் வாங்க..

5. இஷா குப்தா: முகத்தைக் கூட காட்டாமல் நடிகை இஷா குப்தா வெறும் உள்ளாடையுடன் எடுத்துக் கொண்ட மிரர் செல்ஃபி புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு இணைய வாசிகளை திக்குமுக்காட செய்துள்ளார்.

கையில் உள்ள பிளேட்டில் உணவு இருக்கும் என பார்த்தால் புத்தகத்தை வைத்தபடி வித்தியாசமாக போஸ் கொடுத்துள்ளார். சமீபத்தில், கவர்ச்சி கவுனில் கேன்ஸ் திருவிழாவை கலக்கிய நிலையில், வீக்கெண்ட் மோடில் ஆடையே அணியாமல் பிகினியில் ஃப்ரீயாக போஸ் கொடுத்துள்ளார்.

4. ரகுல் ப்ரீத் சிங்: மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றுள்ள நடிகை ரகுல் ப்ரீத் சிங் மஞ்சள் நிற பிகினியில் படு ஹாட்டாக போஸ் கொடுத்துள்ள புகைப்படங்கள் இன்ஸ்டாகிராமையே திணறடித்துள்ளன.

சமீபத்தில், ஐஸ் குளத்தில் பிகினி உடையில் குளித்து சூடேற்றிய ரகுல் ப்ரீத் சிங் மஞ்சள் பிகினியில் மொத்த அழகையும் காட்டி ரசிகர்களை டோட்டலாக கவிழ்த்துள்ளார்.

3. சமந்தா: நடிகை சமந்தா படு கவர்ச்சியாக எல்லாம் போட்டோ போட வேண்டாம் சும்மா படுத்திருக்கும் போட்டோவை தலை கீழாக போட்டாலே போதும், இணையத்தை எப்படி தீப்பிடிக்க வைப்பது என்கிற வித்தையை அறிந்து வைத்தவர்.

துருக்கியில் விஜய் தேவரகொண்டாவுடன் குஷி படத்தில் நடித்து வரும் சமந்தா சோலோவாக இருக்கும் போட்டோவை பதிவிட்டு இன்ஸ்டாகிராமில் லைக்குகளை அள்ளி உள்ளார்.

2. கீர்த்தி சுரேஷ்: மாமன்னன் இசை வெளியீட்டு விழாவில் கலந்து கொண்டு மாஸ் காட்டிய நடிகை கீர்த்தி சுரேஷ் இந்த வாரம் கவர்ச்சி கவுனில் ஸ்லீவ் ரெண்டையும் எவ்வளவு இறக்கி விட முடியுமோ அந்த அளவுக்கு இறக்கி விட்டு தனது ஒட்டுமொத்த ஹாட்னஸையும் கடை விரித்தே காட்டி உள்ளார்.

செம அழகாகவும் அதே நேரத்தில் உச்சகட்ட கவர்ச்சியை காட்டியும் கீர்த்தி சுரேஷ் வெளியிட்ட இந்த புகைப்படங்கள் இந்த வாரம் வேறலெவல் டிரெண்டானது.

1. ராஷி கன்னா: பின்னாடி என்ன பார்க்குறீங்க, மொத்த அழகையும் கண்ணாடியில் காட்டியிருக்கேன் அங்க பாருங்க என கவர்ச்சி கவுனில் முன்னழகை எடுப்பாக காட்டி மெர்சல் காட்டி உள்ளார்.

இந்தி படங்களிலும் வெப்சீரிஸ்களிலும் நடிக்க ஆரம்பித்த நிலையில், ராஷி கன்னாவின் ரேஞ்சே வேறலெவலுக்கு சென்று விட்டது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.