மும்பை: மகாபாரத தொடரில் சகுனி மாமா என்கிற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமான குஃபி பெயின்டல் உடல்நலக்குறைவால் இன்று காலை காலமானார். அவருக்கு வயது 78. சில காலமாக இதயம் மற்றும் சிறுநீரகம் தொடர்பான நோய்களுடன் போராடி வந்த குஃபி பெயின்டல் 10 நாட்களுக்கு முன்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஐசியுவில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இன்று காலை 9:00 மணியளவில் நடிகர் குஃபி பெயின்டல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். குஃபி பெயின்டலின் மறைவு பாலிவுட் வட்டாரத்தில் சோகத்தை […]