சென்னை: அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
ஜூன் 5-ம் தேதியான இன்று உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுகிறது. இதனிடையே, உலக சுற்றுச்சூழல் நாளையொட்டி, முதல்வர் ஸ்டாலின் இன்று தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்: “இந்த ஆண்டுக்கான உலக சுற்றுச்சூழல் நாள் மையக்கருவாக நெகிழி மாசுபாட்டை வெல்லுங்கள் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அளவற்ற, தேவையற்ற நெகிழிப் பயன்பாட்டை எதிர்த்து நாம் தொடங்கிய மீண்டும் மஞ்சப்பை இயக்கத்தில் மக்கள் அக்கறையுடன் பங்கேற்க வேண்டும். மக்காத் தன்மையுடைய பிளாஸ்டிக் கழிவுகளை முறையாகப் பிரித்துப் போடவேண்டும்.” என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.