ராய்ப்பூர்,
தகவல் தெரிவித்தால் ரூ.1 கோடி சன்மானம் அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்த மூத்த மாவோயிஸ்டு பயங்கரவாதி சுதர்சன் கட்டம் (வயது 69). இவர், சத்தீஷ்கார் மாநிலத்தின் பஸ்தார் பிராந்திய காட்டுப்பகுதியில் கடந்த வியாழக்கிழமை மாரடைப்பால் இறந்துவிட்டதாக போலீசார் நேற்று தெரிவித்தனர். இதுதொடர்பான தகவலை மாவோயிஸ்டு பயங்கரவாதிகள் வெளியிட்டிருப்பதாகவும் அவர்கள் கூறினர்.
தெலுங்கானாவில் பிறந்த ஆனந்த் என்ற சுதர்சன் கட்டம், மாவோயிஸ்டு பயங்கரவாத இயக்கத்தை பரப்புவதில் பிரதான பங்காற்றியுள்ளார். அந்த இயக்கத்தின் பத்திரிகைகளுக்கு ஆசிரியராக இருந்ததுடன், முக்கிய பொறுப்புகளையும் வகித்துள்ளார் என போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :