சென்னை : நடிகை ரம்பா இன்று தனது 47வது பிறந்த நாளை கொண்டாடி வருகிறார். இந்நாளில், அவருக்கு இருக்கும் சொத்து எவ்வளவு என்பதை பார்க்கலாம்.
அழகான க்யூட்டான நடிகையான ரம்பா, தமிழ் சினிமாவில் 90களின் முன்னணி நடிகையாக வலம் வந்தார்.
இவர் உழவன் என்ற திரைப்படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகம் ஆனார்.
நடிகை ரம்பா : உழவன் படத்தை தொடர்ந்து உள்ளத்தை அள்ளித்தா, சுந்தர புருஷன், செங்கோட்டை, விஐபி, அருணாச்சலம், காதலா காதலா உள்ளிட்ட படங்களில் நடித்து பிரபலமானார். உள்ளத்தை அள்ளித்தா படத்தில் அழகிய லைலா பாடலுக்கு பாவடையை காற்றில் பறக்கவிட்டு ஒட்டுமொத்த தமிழ் ரசிகர்களையும் கட்டி இழுத்துவிட்டார்
அழகிய லைலா : அந்த பாடலில் இவரின் ஆட்டத்தைப் பார்த்து மயங்கிய இளசுகள் ரம்பாவுக்கு தொடையழகி ரம்பா என பட்டப்பெயர் வைத்து செல்லமாக அழைத்து வந்தனர். தற்போது இவர் பீல்டில் இல்லை என்றாலும், தொடை அழகு என்றாலே அது ரம்பா தான் என்ற பேச்சு எழுந்து வருகிறது. அவ்வளவு ஏன் தொடையை ரம்பா இன்சூரன்ஸ் செய்து இருப்பதாகவும் அப்போது பேச்சுக்கள் அடிபட்டன.
பல மொழி படங்களில் : தமிழ் மட்டுமில்லாமல், தெலுங்கு, மலையாளம், இந்தி கன்னடம், பெங்காலி, போஜ்புரி போன்ற பல மொழிப்படங்களிலும் நடித்துள்ள ரம்பா தன்னுடைய நடிப்பு திறமையால் கொடிகட்டிப் பறந்தார். ரம்பா தமிழில் கடைசியாக பெண் சிங்கம் என்ற படத்தில் நடித்திருந்தார்.
3 குழந்தைகள் : இவர் திரைப்படங்களில் பிஸியாக நடித்துக்கொண்டு இருக்கும் போதே, கடந்த 2010ஆம் ஆண்டு கனடா தொழிலதிபர் இந்திரகுமார் பத்மநாபன் என்பவரை திருமணம் செய்து கொண்டு கனடாவில் செட்டில் ஆனார். அதன் பிறகு, சினிமாவில் தலைகாட்டவே இல்லை. நடிகை ரம்பாவுக்கு இரண்டு மகள்களும் ஒரு மகனும் இருக்கிறார்கள்.
சொத்து மதிப்பு : நடிகை ரம்பாவின் சொத்து மதிப்பு மட்டும் 3 மில்லியன் டாலர் வரை இருக்கும் என கூறப்படுகிறது. ரம்பாவின் கணவர் இந்திரகுமார் மேஜிக்வுட்ஸின் தலைமை நிர்வாக அதிகாரியாக (CEO) இருக்கிறார். ரம்பாவின் கணவர் இந்திரகுமார் கனடாவை சேர்ந்தவர் என்றாலும் சென்னையில் தொழிற்சாலை ஒன்றை நடத்தி வருகிறார். இது, கிட்சன் மற்றும் படுக்கை அறை, குளியல் அறை உபகரணங்கள் தயாரித்து விற்பனை செய்யும் நிறுவனமாகும்.