சென்னை: தெலுங்கில் 1989ம் ஆண்டு வெளியான அடவிலோ அபிமன்யூ படத்தின் மூலம் அறிமுகமானவர் ஐஸ்வர்யா.
பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளான ஐஸ்வர்யா தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் உள்ளிட்ட மொழிகளிலும் நடித்துள்ளார்.
இவர் 1992ம் ஆண்டு வெளியான மீரா என்ற படத்தில் சீயான் விக்ரம் ஜோடியாக நடித்திருந்தார்.
இந்தப் படத்தில் விக்ரம் உடன் நடித்த லிப் லாக் கிஸ் சீன் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
லிப் லாக் சீனில் அந்த மாதிரி ஆகிடுச்சு: தெலுங்கில் வெளியான அடவிலோ அபிமன்யூ திரைப்படம் நாயகியாக அறிமுகமானவர் ஐஸ்வர்யா. பழம்பெரும் நடிகை லட்சுமியின் மகளாக அறிமுகமான போதும், ஐஸ்வர்யாவின் கவர்ச்சியான நடிப்பு ரசிகர்களை கட்டிப் போட்டது. முக்கியமாக பார்த்திபனுடன் நடித்த உள்ளே வெளியே திரைப்படம் 90ஸ் ரசிகர்களால் ஒருபோதும் மறக்கவே முடியாது.
தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த ஐஸ்வர்யா, இப்போது சின்ன சின்ன கெஸ்ட் ரோலில் முகம் காட்டி வருகிறார். இந்நிலையில், தற்போது பிரபல யூடியூப் சேனலுக்கு கொடுத்த பேட்டியொன்றில், மீரா படத்தில் நடித்த அனுபவம் குறித்து மனம் திறந்துள்ளார். ஒளிப்பதிவாளார் பிசி ஸ்ரீராம் இயக்கிய இந்தப் படத்தில் விக்ரம் ஹீரோவாக நடித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அப்போது பிரபலமாக விக்ரம் கேரியரில் மீரா முக்கியமான படமாக அமைந்தது. இந்நிலையில், இந்தப் படத்தில் விக்ரம் – ஐஸ்வர்யா இருவருக்கும் லிப் லாக் கிஸ் சீன் ஒன்றை வைத்திருந்தார் இயக்குநர் பிசி ஸ்ரீராம். அதில், நடித்தபோது நடந்த சம்பவத்தை ஐஸ்வர்யா வெளிப்படையாகவே பேசியுள்ளார். நடிப்புக்காக எந்த எல்லைக்கும் செல்லக்கூடிய விக்ரம் உடன் மீரா படத்தில் ஜோடியானது மறக்க முடியாத அனுபவம் தான்.
ஆனால், அந்த லிப் லாக் சீன் தான் மிக மோசமான அனுபவமாகிவிட்டது எனக் கூறியுள்ளார். ஸ்டூடியோவில் முழங்கால் அளவு தண்ணீரில் நின்றுகொண்டே இருவரும் கிஸ் செய்துகொள்ளும் காட்சி படமாக்கப்பட்டது. அதற்காக தான் ரெடியாக இருந்தேன், ஆனால் நான் கால் வைத்த இடம் ரொம்ப அழுக்காக இருந்தது. அதில் கால் வைக்கவே மனம் வரவில்லை.
அதனால் விக்ரம் அருகே சென்றதும் எனக்கு சுத்தமாக ரொமான்ஸ் மூடே வரவில்லை. லிப் லாக் கிஸ் செய்தபோது வாந்தி வந்துவிட்டது என ஐஸ்வர்யா தெரிவித்துள்ளார். அதேபோல் மீரா படத்தின் ஷூட்டிங் தொடங்கிய ஆரம்பத்தில் விக்ரமும் நானும் எலியும் பூனையுமாக இருந்தோம். பாதி படப்பிடிப்பு முடிந்த பின்னர் தான் எங்களுக்குள் கெமிஸ்ட்ரி ஒர்க் அவுட் ஆனது. ஆனால், அதற்குள் அந்த லிப் லாக் சீன் எடுத்து முடித்துவிட்டார்கள் என ஐஸ்வர்யா கூறியுள்ளார்.