இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
விடாமுயற்சிதுணிவு படத்திற்கு பிறகு அஜித் நடித்து வரும் திரைப்படம் தான் விடாமுயற்சி. மகிழ் திருமேனியின் இயக்கத்தில் அனிருத்தின் இசையில் உருவாகும் இப்படத்தின் அதிகாரபூர்வ அறிவிப்பு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு வெளியானது. அஜித் மற்றும் மகிழ் திருமேனி என்ற புது கூட்டணியில் விடாமுயற்சி உருவாவதால் ரசிகர்களின் எதிர்பார்ப்பும் அதிகரித்துள்ளது. காரணம் , அஜித் தொடர்ச்சியாக வினோத்தின் இயக்கத்தில் மூன்று படங்களில் நடித்துள்ளார். எனவே தற்போது வேறொரு இயக்குனரின் இயக்கத்தில் அஜித் நடிக்கவுள்ளது ரசிகர்களுக்கு புது அனுபவத்தை கொடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
கணிப்புபொதுவாக மகிழ் திருமேனியின் படங்கள் என்றாலே ஆக்ஷன் திரில்லர் ஜானரில் செம ஸ்டைலிஷாக இருக்கும். தடையற தாக்க, தடம் போன்ற படங்கள் அதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக இருக்கின்றது. எனவே இவர் அஜித் போன்ற ஒரு ஸ்டைலிஷான நடிகரை இயக்கப்போகின்றார் என்றதும் அப்படம் ஹாலிவுட் தரத்தில் இருக்கும் என ரசிகர்கள் முதல் திரைபிரபலங்கள் வரை கணித்து வருகின்றனர். மேலும் அஜித் இப்படத்திற்காக தன் கெட்டப்பை டோட்டலாக மாற்றி வருகிறாராம். கடந்த சில படங்களாக அஜித் சால்ட் அண்ட் பேப்பர் லுக்கிலேயே இருந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்திற்காக அஜித் புது கெட்டப்பிற்கு மாற இருப்பதாக தகவல்கள் வருகின்றன. மேலும் இப்படத்திற்காக அஜித் செம பிட்டாகவும் மாறி வருகிறாராம்
வதந்திசமீபத்தில் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா சம்மந்தப்பட்ட இடங்களில் ரைடு நடந்துள்ளது. எனவே இந்த ரைடின் காரணமாக அஜித் அப்சட்டாக இருப்பதாகவும், இதனால் விடாமுயற்சி படம் நடக்குமா ? நடக்காதா ? என்ற பேச்சுக்கள் பரபரப்பாக போய்க்கொண்டிருக்கிறது. மேலும் படத்தின் படப்பிடிப்பும் இன்னும் துவங்கப்படாமல் தாமதமாகிக்கொண்டே செல்வதால் சிலர் விடாமுயற்சி படம் கைவிடப்பட்டதா என்ற சதேகத்திலும் இருக்கின்றனர். இந்நிலையில் சமீபத்தில் வெளியான சில புகைப்படங்கள் இந்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இருக்கின்றது
முற்றுப்புள்ளி வைத்த AKவிடாமுயற்சி படம் நடக்குமா? நடக்காதா என்ற பேச்சுக்கள் ஒருபக்கம் போய்க்கொண்டிருக்க தற்போது வந்த ஒரு தகவல் இந்த வதந்திகளுக்கு எல்லாம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. அதாவது விடாமுயற்சி ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் காரணமாக இயக்குனர் மகிழ் திருமேனியும், அஜித்தும் லண்டன் சென்றுள்ளார்களாம். எனவே இந்த தகவலை அடுத்து ரசிகர்கள் அனைவரும் விடாமுயற்சி படம் கண்டிப்பாக நடக்கும் என்ற நம்பிக்கையில் இருக்கின்றனர். மேலும் இன்னும் ஒரு மாதத்திற்குள் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு துவங்கி விறுவிறுப்பாக நடத்தி முடிக்கப்பட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது குறிப்பிடத்தக்கது