இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
அஜித்தின் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு எப்போதும் துவங்கும் என்ற கேள்வி தான் அனைவரிடமும் இருந்து வருகின்றது. கடந்த ஜனவரி மாதமே அஜித் மகிழ் திருமேனியின் இயக்கத்தில் நடிக்கப்போகிறார் என உறுதியானது. ஆனால் அதனை படக்குழு அதிகாரபூர்வமாக அறிவிக்காமல் இருந்து வந்தது.
கிட்டத்தட்ட நான்கு மாதங்களுக்கு பிறகு அஜித்தின் பிறந்தநாளை முன்னிட்டு விடாமுயற்சி படத்தின் அறிவிப்பு வெளியானது. இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு மே மாதமே துவங்குவார்கள் என ரசிகர்கள் எதிர்பார்த்தனர்.. ஆனால் படப்பிடிப்பு துவங்கவில்லை.
Thalapathy 68: தளபதி 68 படத்திற்காக விஜய் எடுக்கப்போகும் அவதாரம்..ஹைப்பை ஏற்றிய வெங்கட் பிரபு..!
மேலும் விடாமுயற்சி படத்தை தயாரிக்கும் லைக்கா நிறுவனத்தில் ரெய்டு நடத்தப்பட்டது. இதையடுத்து விடாமுயற்சி படம் நடக்குமா ? நடக்காதா ? என்ற சந்தேகமும் எழுந்தது. ஆனால் இந்த வதந்திக்கெல்லாம் தற்போது முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகியுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் துவங்கும் என்ற நல்ல செய்தி தற்போது வெளியாகியுள்ளது.
விடாமுயற்சி
இப்படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக இயக்குனர் மகிழ் திருமேனி மற்றும் அஜித் லண்டனுக்கு சென்றிருந்தனர். இதையடுத்து அந்த வேலைகளெல்லாம் முடித்துவிட்டு தற்போது இருவரும் சென்னை திரும்பியுள்ளனர். இந்நிலையில் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் அனைத்தும் முடிவடைந்த நிலையில் இன்னும் சில நாட்களில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு புனேவில் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதற்காக புனேவில் மிகப்பெரிய செட் ஒன்றை மகிழ் திருமேனி அமைந்துள்ளதாகவும், அங்கு சண்டை காட்சிகளை முதலில் படமாக இருப்பதாகவும் செய்திகள் வருகின்றன. இது ஒருபக்கம் இருக்க விடாமுயற்சி படம் ஆக்ஷன் திரில்லர் படமாகத்தான் இருக்கும் என அனைவரும் எதிர்பார்த்த நிலையில் தற்போது வெளியான ஒரு தகவல் அனைவரையும் ஆச்சர்யத்தில் ஆழ்த்தியுள்ளது.
கதைக்களம்
அதாவது விடாமுயற்சி படத்தில் எந்தளவிற்கு ஆக்ஷன் காட்சிகள் இருக்கின்றதோ அதே அளவிற்கு காதல் காட்சிகளும் இருக்குமாம். சமீபகாலமாக அஜித் காதல் காட்சிகளில் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் தற்போது விடாமுயற்சி படத்தில் காதல் காட்சிகள் நிறைந்திருக்கும் என்ற தகவல் அவரது ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது.
காதலை மையமாக வைத்து விடாமுயற்சி படத்தை ஆக்ஷன் திரில்லர் படமாக மகிழ் திருமேனி எடுக்க இருக்கிறாராம். இதைத்தவிர படத்தில் மேலும் பல திருப்பங்கள் நிறைந்திருக்கும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகின்றது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தின் படப்பிடிப்பு இந்த வாரத்தில் துவங்கி அக்டோபர் மாதத்திற்குள் முடித்துவிட்டு அடுத்தாண்டு ஏப்ரல் மாதம் படத்தை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.