இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
கடந்த சில நாட்களாக அஜித்தின் விடாமுயற்சி திரைப்படம் கைவிடப்படுமா ? என்ற கவலை ரசிகர்களின் மத்தியில் இருந்து வருகின்றது. ஏனென்றால் விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா தொடர்புடைய சில இடங்களில் ரெய்டு நடைபெற்றதால் இப்படம் கைவிடப்படும் என சில வதந்திகள் பரவின.
ஆனால் அதெல்லாம் வெறும் வதந்திதான் என தற்போது வெளியான ஒரு தகவல் உறுதிப்படுத்தியுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தின் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகளுக்காக அஜித் மற்றும் மகிழ் திருமேனி லண்டனுக்கு சென்று திரும்பியுள்ளார். இதையடுத்து இப்படத்தின் படப்பிடிப்பு இன்னும் சில தினங்களில் புனேவில் துவங்கவுள்ளது.
விரைவில் படப்பிடிப்பு
புனேவில் மிகப்பெரிய செட் அமைத்து அங்கு இப்படத்தின் சண்டை காட்சிகளை முதலில் எடுக்க மகிழ் திருமேனி திட்டமிட்டுள்ளார். எனவே இதன் மூலம் விடாமுயற்சி படத்திற்கு எந்த பிரச்னையும் இல்லை, படப்பிடிப்பு திட்டமிட்டபடி நடக்கும் என உறுதியாகியுள்ளது.
இந்நிலையில் விடாமுயற்சி படத்தில் நடிக்கும் நடிகர்களின் தேர்வு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றது. அதன் படி இப்படத்தில் அஜித்திற்கு ஜோடியாக த்ரிஷா நடிப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. அஜித்துடன் இதற்கு முன்பு பல படங்களில் இணைந்து நடித்துள்ள த்ரிஷா விடாமுயற்சி மூலம் மீண்டும் இணையவுள்ளார்.
அஜித்திற்கு வில்லனாக அர்ஜுன் தாஸ்
மேலும் சமீபகாலமாக அஜித்தின் படங்களில் ரொமான்டிக் காட்சிகள் அதிகம் இடம்பெறாத நிலையில் விடாமுயற்சி படத்தில் ரொமான்டிக் காட்சிகளுக்கு அதிகளவில் முக்கியத்துவம் கொடுக்கப்படும் என தெரிகின்றது. இதையடுத்து இப்படத்திற்காக அஜித் தன் கெட்டப்பையும் முற்றிலும் மாற்றி வருவதாக தகவல்கள் வருகின்றது
சால்ட் அண்ட் பேப்பர் கெட்டப்பை தவிர்த்து அஜித் இப்படத்தில் நார்மலான செம ஸ்டைலிஷான கெட்டப்பில் தோன்றுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது. இந்நிலையில் தற்போது வந்த ஒரு தகவல் ரசிகர்களை மேலும் எதிர்பார்ப்பில் ஆழ்த்தியுள்ளது. அதாவது விடாமுயற்சி படத்தில் அர்ஜுன் தாஸ் வில்லனாக நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அண்மைசெய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் சமயம் தமிழ் இணையத்தளத்தி பின் தொடரவும்
கைதி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் பிரபலமான அர்ஜுன் தாஸ் அதன் பிறகு விஜய்யின் மாஸ்டர் உட்பட பல படங்களில் நடித்து பிரபலமான நடிகராக வலம் வருகின்றார். மேலும் லோகேஷின் ஆஸ்தான நடிகரான அர்ஜுன் தாஸ் தற்போது அஜித்தின் படத்தில் வில்லனாக நடிக்கின்றார் என்றவுடன் ரசிகர்களின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
இதைத்தொடர்ந்து விடாமுயற்சி படத்தில் மொத்தம் இரண்டு வில்லன்கள் நடிப்பதாகவும், அதில் ஒரு வில்லனாக அர்ஜுன் தாஸ் நடிக்க கமிட்டாகியுள்ளதாகவும் தகவல்கள் வருகின்றன. விரைவில் இதனைப்பற்றிய அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகின்றது.