தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெயிலின் தாக்கம் குறையாததால் பள்ளிகள் திறப்பு தேதியானது மாற்றப்பட அதிக வாய்ப்புள்ளது. வரும் ஜூன் 7ம் தேதி அனைத்து பள்ளிகளும் திறக்கப்படும் என ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவித்திருந்த நிலையில் பல மாவட்டங்களில் வெயிலில் தாக்கம் 100 டிகிரி பாரன்ஹீட் தாண்டி பதிவாகி வருகிறது.
இதன் காரணமாக தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அமைக்கப்பட வேண்டும் என பல்வேறு தரப்பிலிருந்து பள்ளி கல்வித்துறைக்கு கோரிக்கை வைக்கப்பட்டது. அதன் அடிப்படையில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலினை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி இன்று காலை 11 மணியளவில் சென்னை தலைமைச் செயலகத்தில் சந்தித்து ஆலோசனை மேற்கொள்ள உள்ளார்.
இந்த சந்திப்பின்போது தமிழகத்தில் பள்ளிகள் திறப்பு தேதி மாற்றி அமைக்கப்பட்டு அதிகாரப்பூர்வ தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் வரும் ஜூன் 12-ம் தேதி தமிழகத்தில் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட வாய்ப்புள்ளதாக தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இன்று நடைபெறும் முதலமைச்சர் உடனான ஆலோசனை கூட்டத்திற்கு பிறகு பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பாரு என எதிர்பார்க்கப்படுகிறது.