தென்காசி : சென்னை – கொல்லம் எக்ஸ்பிரஸ் ரயிலில் ஒரு பெட்டியின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டது, கண்டுபிடிக்கப்பட்டு மாற்றப்பட்டது.
கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை செல்லும் ரயில் நேற்று மதியம் 3:20 மணிக்கு செங்கோட்டை வந்தது.
அந்த ரயிலில் எஸ் 3 பெட்டியின் அடிப்பாகத்தில் விரிசல் ஏற்பட்டிருப்பதை ரயில்வே ஊழியர்கள் புனலுாரில் கண்டுபிடித்தனர்.
செங்கோட்டை ரயில் நிலையத்திற்கு ரயில் வந்ததும், அப்பெட்டி விடுவிக்கப்பட்டு, பயணியர் வேறு பெட்டிகளுக்கு மாற்றப்பட்டனர். பின் மதுரையில் மாற்று பெட்டி இணைக்கப்பட்டு, புறப்பட்டுச் சென்றது.
கொல்லம்- – சென்னை ரயிலில் விரிசல் கண்டுபிடிக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement