சூர்யா ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பிற்கு மத்தியில் ‘கங்குவா’ படம் உருவாகி வருகிறது. சிறுத்தை சிவா இயக்கத்தில் பிரம்மாண்டமாக தயாராகி வரும் இந்தப்படத்தின் மாஸான டைட்டில் அண்மையில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிலையில் ‘கங்குவா’ படம் குறித்து பிரபலம் ஒருவர் பகிர்ந்துள்ள தகவல் சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
தமிழ் சினிமாவில் தொடர்ச்சியாக பேமிலி டிராமா படங்களை இயக்கி வருபவர் சிறுத்தை சிவா. இவரது இயக்கத்தில் வீரம், வேதாளம், விவேகம், அண்ணாத்த படங்கள் வெளியாகி பேமிலி ஆடியன்ஸ் மத்தியில் அமோக வரவேற்பினை பெற்றது. இதனையடுத்து தற்போது ‘கங்குவா’ படத்தை இயக்கி வருகிறார் சிவா. கார்த்தியுடன் முதன்முறையாக கூட்டணி அமைத்துள்ளார்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
‘சூர்யா 42’ என்ற பெயரில் இந்தப்படத்தின் பூஜை துவங்கியது. இதுவரை இல்லாத அளவிற்கு சூர்யா படங்களில் மிகப்பெரிய பட்ஜெட்டில் இந்தப்படம் தயாராகி வருகிறது. அத்துடன் ரிலீசுக்கு முன்பாகவே இந்தப்படத்தின் சேட்டிலைட், டிஜிட்டல் மற்றும் ஆடியோ உரிமை பல கோடி ரூபாய்க்கு விற்பனையாகியுள்ளது. பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் இந்தப்படத்தை இயக்கி வருகிறார் சிறுத்தை சிவா.
அண்மையில் இந்தப்படத்தின் ‘கங்குவா’ என்ற டைட்டில் மோஷன் போஸ்டருடன் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் எக்கச்சக்கமான எதிர்பார்ப்பினை கிளப்பியது. இந்நிலையில் பாடலாசிரியர் மதன் கார்க்கி இந்தப்படம் குறித்து பேட்டி ஒன்றில் பேசியுள்ளது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், சிறுத்தை சிவாவின் ரெகுலர் படமாக ‘கங்குவா இருக்காது. இந்தப்படத்திற்காக அவர் கடுமையாக உழைத்துள்ளார். ‘கங்குவா’ படத்தின் சில காட்சிகளை பார்த்தேன். மிகவும் அருமையாக படம் வந்துள்ளது.
Karthi: கார்த்தியின் ‘ஜப்பான்’ பட கதை இந்த உண்மை சம்பவமா.?: அப்போ தரமா இருக்குமே..!
சிறுத்தை சிவா தன்னைத்தானே புதுப்பித்து கொண்ட படமாக ‘கங்குவா’ இருக்கும். படத்தில் நிறைய புதிய விஷயங்கள் உள்ளது. சூர்யாவின் நடிப்பு, சிறுத்தை சிவாவின் மேக்கிங் அனைத்துமே புதுமையாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளார். மதன் கார்கியின் இந்த பேட்டி ரசிகர்கள் மத்தியில் எதிர்பார்ப்பினை கிளப்பியுள்ளது.
‘கங்குவா’ படத்திற்காக உடல் எடை அதிகரித்து மிரட்டலான லுக்கில் வலம் வருகிறார் விஜய் ஆண்டனி. ஸ்டுடியோ கீரின் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரிக்கும் இந்தப்படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். ‘கங்குவா’ படத்தில் சூர்யா ஜோடியாக பிரபல பாலிவுட் நடிகை திஷா பதானி நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
Leo: ரிலீசுக்கு முன்பே பட்டையை கிளப்பும் ‘லியோ’: மாஸ் காட்டும் தளபதி.!