சென்னை : நடிகர் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் லீட் கேரக்டர்களில் நடித்து கடந்த 2010ம் ஆண்டில் வெளியாகி சூப்பர் ஹிட்டடித்த படம் பையா.
கார்த்தி கேரியரில் இந்தப் படம் பெஸ்டாக அமைந்தது. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார்.
இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக இருந்த நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்தை லிங்குசாமியே இயக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கப்பட்டன.
பையா 2 படத்தில் இணையும் நடிகர் கார்த்தி : நடிகர்கள் கார்த்தி, தமன்னா உள்ளிட்டவர்கள் நடிப்பில் கடந்த 2010ம் ஆண்டில் வெளியான படம் பையா. இந்தப் படத்தை இயக்குநர் லிங்குசாமி இயக்கியிருந்தார். இந்தப் படத்தில் கார்த்தி மற்றும் தமன்னாவின் பெங்களூரு -மும்பை நெடுஞ்சாலை பயணம், அதனிடையே அவர்களுக்குள் துளிர்க்கும் காதல், சேசிங் காட்சிகள் என அனைத்துமே ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. இந்தப் படம் நடிகர் கார்த்தியின் கேரியர் பெஸ்டாக அமைந்தது.
வழக்கமான காதல் கதை தான் என்றாலும் அதை நெடுஞ்சாலை பயணத்தினூடே சிறப்பாக்கியிருந்தார் இயக்குநர் லிங்குசாமி. இந்தப் படத்தின் இரண்டாவது பாகத்திற்கான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகமாக ஏற்பட்ட நிலையில், படத்தின் இரண்டாவது பாகத்தை லிங்குசாமியே இயக்கவுள்ளதாக தகவல் தெரிவித்தன. முன்னதாக இந்தப் படத்தில் கார்த்தி நடிக்கவில்லை என்றும் ஆர்யா நாயகனாக களமிறங்கவுள்ளதாகவும் அவருக்கு ஜோடியாக ஜான்வி கபூர் நடிக்கவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.
ஆனால் இந்தத் தகவலை அப்போது ஜான்வியின் தந்தை போனிகபூர் மறுத்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்தப் படத்தில் நடிக்க கார்த்தி ஒப்புதல் அளித்துள்ளதால் அவரே பையா 2 படத்தில் நடிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. படத்தை ஸ்டூடியோ கிரின் நிறுவனம் தயாரிக்கவுள்ள நிலையில், முதல் பாகத்திற்கு இசையமைத்து சிறப்பான பாடல்களை கொடுத்திருந்த யுவன் சங்கர் ராஜாவே இரண்டாவது பாகத்திலும் இசையமைக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பையா படம் வெளியான சூழலில், நடிகர் கார்த்தி சாக்லேட் பாய் கேரக்டர்களில் அதிகமாக நடித்து வந்தார். அப்போது பையா படம் அவருக்கு சிறப்பாக பொருந்தியது. ரசிகர்கள் படத்தை கொண்டாடினார்கள். இந்நிலையில் ஏறக்குறைய 13 ஆண்டுகள் கழித்து இந்தப் படத்தின் அடுத்த பாகம் குறித்த பேச்சுவார்த்தைகள் நடந்து வருகிறது. இது எத்தகைய கதைக்களத்தில் அமையும் என்பதை பொருத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
தற்போது சிறிது முதிர்ச்சியான கேரக்டர்களை தேர்ந்தெடுத்து நடிகர் கார்த்தி நடித்து வருகிறார். கைதி, விருமன், பொன்னியின் செல்வன், சர்தார் என அவரது கேரக்டர்களிலும் கேரக்டர் தேர்வுகளிலும் முதிர்ச்சி காணப்படுகிறது. இந்த நேரத்தில் சாக்லேட் பாய் போன்ற கேரக்டரை கார்த்தி தேர்ந்தெடுக்கமாட்டார் என்று ரசிகர்கள் கூறி வருகின்றனர். அதனால் பையா முதல் பாகத்தை போன்ற கதைக்களமாக இருந்தால் அது கார்த்திக்கு பொருந்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.