சென்னை : நடிகை நயன்தாரா தென்னிந்திய அளவில் முன்னணி நடிகையாக உள்ளார். தற்போது இவர் ஷாருக்கானுடன் ஜவான் படத்திலும் நடித்து வருகிறார்.
ஜவான் படத்தின்மூலம் பாலிவுட்டிலும் கால் பதித்துள்ளார் நயன்தாரா. இந்தப் படத்தின் ரிலீஸ் தற்போது தள்ளிப் போயுள்ளது.
தென்னிந்திய அளவில் விஜய், அஜித் என முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ள நயன்தாரா நடிப்பில் அடுத்ததாக இறைவன், நயன்தாரா75, டெஸ்ட், ஜவான் என அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன.
நடிகை நயன்தாரா அழகு ரகசியம் : நடிகை நயன்தாரா தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக கொண்டாடப்படுபவர். தென்னிந்திய அளவில் ரஜினி, விஜய், அஜித், சூர்யா, மம்முட்டி, கார்த்தி என முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர்ந்து நடித்துள்ளார் நயன்தாரா. இவரது நடிப்பில் அடுத்தடுத்த படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. ஜவான், இறைவன், டெஸ்ட், நயன்தாரா 75 ஆகிய படங்களில் இவர் கவனம் செலுத்தி வருகிறார். இதில் ஜவான் படம் மூலம் பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கவுள்ளார்.
இயக்குநர் விக்னேஷ் சிவனை இவர் கடந்த வருடத்தில் திருமணம் செய்த நிலையில், இவர்கள் இருவரும் வாடகைத்தாய் முறையில் 2 குழந்தைகளுக்கு பெற்றோர் ஆகியுள்ளனர். இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அவற்றிற்கு எல்லாம் விளக்கம் அளித்தனர். இந்நிலையில் தற்போது சாய் வாலே என்ற டீக்கடையில் பெரும் முதலீடு செய்துள்ளார் நயன்தாரா. தொடர்ந்து அகஸ்தியா என்ற பழைய திரையரங்கை இவர் விலைக்கு வாங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதில் இரண்டு திரையரங்குகளை இவர் கட்டவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
கடந்த 20 ஆண்டுகளாக இவர் சினிமாவில் இருந்து வருகிறார். ஆனாலும் இதுவரை ரசிகர்களை வெகுவாக கவர்ந்த நடிகையாகவே இருக்கிறார். திருமணம், குழந்தைகள் என செட்டில் ஆன போதிலும் தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். தொடர்ந்து ரசிகர்களுக்கு பிடித்த நடிகையாகவே உள்ளார். இந்நிலையில், நயன்தாராவின் ப்யூட்டி சீக்ரெட்கள் தற்போது வெளியாகியுள்ளது. 70 கிலோ வரை எடையுடன் இருந்த நயன்தாரா ஜிம் வொர்க் அவுட், யோகா என தன்னை சிறப்பாக ஈடுபடுத்திக் கொண்டு, தன்னுடைய உடல் எடையை குறைத்துள்ளார்.
குறிப்பாக தினமும் 2 மணி நேரம் இவர் யோகா செய்வாராம். இதுதான் இவரது பிட்னசின் முக்கியமான காரணமாக சொல்லப்படுகிறது. உணவிலும் சிறப்பான கட்டுப்பாட்டை இவர் தொடர்ந்து செய்து வருகிறார். தினந்தோறும் வொர்க் அவுட் முடித்துவிட்டு, இளநீர் குடிப்பதை வழக்கமாக கொண்ட நயன் உணவில் ஸ்மூத்தியும் கண்டிப்பாக இருக்கும் என்று கூறப்படுகிறது. இதன்மூலம் இவருக்கு சிறப்பான எனர்ஜி கிடைப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.
மதிய உணவிலும் கார்போஹைட்ரேட் உணவுகளை எடுக்காமல், இறைச்சி, காய்கறிகள் மற்றும் முட்டை போன்றவற்றை சமமாக எடுத்துக் கொள்வதை வழக்கமாக கொண்டுள்ள நயன்தாரா, கண்டிப்பாக 8 மணி நேரம் தூங்கி விடுவாராம். இதன்மூலம் தன்னுடைய எடையை இவர் சிறப்பாக பராமரிக்க முடிகிறதாம். இவையெல்லாம்தான் நயன்தாராவின் பிட்னஸ் சீக்ரெட்களாக கூறப்படுகிறது. நம்ம நயன்தாரா எப்படி பார்த்தாலும் அழகுதான். ஐயா படத்தில் கொழுக் மொழுக் என ரசிகர்களை கவர்ந்த நயன், தற்போது ஒல்லியான நிலையிலும் அனைவரையும் கவர்கிறார்.