Rajinikanth: நண்பன் உயிருடன் இல்லை: அம்பரீஷ் மகன் திருமணத்தில் முதல் ஆளாக பங்கேற்ற ரஜினி

இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
Abhishek Ambareesh, Aviva Bidappa Wedding:அபிஷேக் அம்பரீஷ், அவிவா பிடப்பாவின் திருமணத்தில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார் ரஜினிகாந்த்.

​அபிஷேக்​மறைந்த கன்னட நடிகர் அம்பரீஷும், சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தும் நெருங்கிய நண்பர்கள் ஆவர். அம்பரீஷின் மனைவி சுமலதா தமிழ் ரசிகர்களுக்கு தெரிந்த நடிகை தான். அரசியல் பக்கம் சென்ற சுமலதா தற்போது மண்டியா தொகுதி எம்.பி.யாக இருக்கிறார். இந்நிலையில் தன் ஒரே மகனான அபிஷேக்கிற்கு பெண் பார்த்து திருமணம் நடத்தி வைத்திருக்கிறார்.நிகிலா விமல்​”இந்த படம் பண்ணலாமானு யோசிச்சேன்” நடிகை Nikhila Vimal!​​திருமணம்​அபிஷேக் அம்பரீஷுக்கும், மாடல் அழகி அவிவா பிடப்பாவுக்கும் பெங்களூரில் இருக்கும் பேலஸ் கிரவுண்ட்ஸில் இன்று திருமணம் நடந்தது. பிரமாண்டமாக நடந்த அந்த திருமணத்தில் முதல் ஆளாக கலந்து கொண்டு மணமக்களை ஆசிர்வாதம் செய்தார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அப்பொழுது எடுக்கப்பட்ட புகைப்படங்களும், வீடியோவும் வெளியாகியிருக்கிறது.திருமண வீடியோ​​​பிரபலங்கள்​அபிஷேக், அவிவாவின் திருமணத்தில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டார்கள். ராக்கி பாய் யஷ், சுஹாசினி மணிர்தனம், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, துணை குடியரசுத் தலைவர் வெங்கையா நாயுடு, முன்னாள் கிரிக்கெட் வீர்ர அனில் கும்ப்ளே உள்ளிட்டோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள். திருமணம் நடந்த இடத்தில் திரும்பும் பக்கம் எல்லாம் பிரபலங்களாக இருந்தார்கள். மறைந்த கன்னட சூப்பர் ஸ்டாரான புனீத் ராஜ்குமாரின் மனைவி அஸ்வினியை பார்த்த அனைவருக்கும் ஒரே சந்தோஷம் தான்.

​Rambha:ரம்பாவே விளக்கம் கொடுத்தும் அடங்காத அந்த தொடை மேட்டர்

​மோடி​நாளை மறுநாள் அதாவது ஜூன் 7ம் தேதி திருமண வரவேற்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருக்கிறார் சுமலதா. அபிஷேக்கின் திருமணத்தில் ஆயிரம் விருந்தினர்கள் கலந்து கொண்டார்கள். முன்னதாக தன் மகனுடன் டெல்லிக்கு சென்று பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து திருமணத்திற்கு அழைப்பு விடுத்தார் சுமலதா. அபிஷேக்கை ஆசிர்வாதம் செய்தார் மோடி என செய்தியாளர்களிடம் தெரிவித்தார் சுமலதா.
​நடிகர்​அபிஷேக் தன் தந்தை வழியில் நடிகரானார். அமர் படம் மூலம் ஹீரோவாக அறிமுகமானார் அபிஷேக். அவர் தற்போது படங்களில் பிசியாக நடித்து வருகிறார். பிரபல ஃபேஷன் டிசைனரான பிரசாத் பிடப்பாவின் மகள் தான் அவிவா என்பது குறிப்பிடத்தக்கது.

​லால் சலாம்​ரஜினிகாந்த் தன் மகள் ஐஸ்வர்யாவின் இயக்கத்தில் லால் சலாம் படத்தில் நடித்து வருகிறார். படப்பிடிப்பு புதுச்சேரியில் நடந்து வருகிறது. புதுச்சேரியில் ரஜினியை பார்த்த ரசிகர்கள் குஷியாகிவிட்டனர். இந்நிலையில் ரஜினிகாந்த் தன் நண்பனின் மகனுக்காக பெங்களூர் வந்திருக்கிறார். பெங்களூரில் ரஜினியை பார்த்த ரசிகர்கள், தலைவர் புதுச்சேரியில் தானே இருந்தார் என வியந்து பேசுகிறார்கள்.
​ஐஸ்வர்யா​7 ஆண்டுகள் கழித்து படம் இயக்க வந்திருக்கிறார் ஐஸ்வர்யா. அந்த படத்திலேயே தன் அப்பாவை நடிக்க வைத்திருப்பதால் மகிச்சியில் இருக்கிறார். அப்பா என் படத்தில் நடிப்பார் என நான் நினைத்துக் கூட பார்த்தது இல்லை என சமூக வலைதளத்தில் உருக்கமாக போஸ்ட் போட்டுள்ளார் ஐஸ்வர்யா. ரஜினியை வைத்து படம் இயக்க எத்தனையோ பேர் ஆசைப்படும் நிலையில் அந்த வாய்ப்பு ஐஸ்வர்யாவுக்கு கிடைத்திருக்கிறது. லால் சலாம் படத்தில் ரஜினி மட்டும் அல்ல முன்னாள் கிரிக்கெட் வீரரான கபில் தேவும் கவுரவத் தோற்றத்தில் வருகிறார்.

​Rajinikanth: இப்படி நடக்கும்னு நான் நினைக்கவே இல்லப்பா: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் உருக்கம்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.