இதுவரை இல்லாத குறைந்த விலை- Amazon Great Summer Sale இல் ரூ.899 முதல் ஸ்மார்ட்வாட்ச்களைப் பெறுங்கள்
ஆந்திர மாநிலத்தில் இருக்கும் விஜயவாடாவில் விஜயலட்சுமியாக பிறந்தவர் ரம்பா. கடந்த 1992ம் ஆண்டு வெளியான Aa Okkati Adakku படம் மூலம் தெலுங்கு திரையுலகில் அறிமுகமானார் ரம்பா. அந்த படத்தில் வந்த தன் கதாபாத்திரத்தின் பெயரான ரம்பாவை தான் நிஜத்திலும் பயன்படுத்தத் துவங்கினார்.
“இந்த படம் பண்ணலாமானு யோசிச்சேன்” நடிகை Nikhila Vimal!
தன் தாய்மொழியான தெலுங்கு தவிர்த்து தமிழ், மலையாளம், இந்தி படங்களிலும் நடித்திருக்கிறார் ரம்பா. தமிழில் ரஜினிகாந்த், கமல் ஹாசன், விஜய், பிரசாந்த் என அனைத்து முன்னணி நடிகர்களுடன் சேர்ந்து நடித்துவிட்டார்.
கோலிவுட்டில் பெரிய ரவுண்டு வந்த ரம்பாவின் பிறந்தநாள் இன்று. இதையடுத்து பலரும் அவருக்கு சமூக வலைதளங்களில் வாழ்த்து தெரிவித்து வருகிறார்கள்.
ரம்பாவை ரசிகர்கள் தொடையழகி என்றே அழைத்து வந்தார்கள். ரம்பா சார் என 90ஸ் கிட்ஸுகள் அவருக்கு ரசிகர்களாக இருந்தார்கள். ரம்பா தன் தொடையை இன்சூர் செய்து வைத்திருக்கிறார் தெரியுமா என்று முன்பு பட்டிதொட்டி எல்லாம் பேசப்பட்டது.
கிராமத்தில் இருக்கும் பாட்டிகள் கூட, இந்த ரம்பா புள்ள தொடையை போய் இன்சூரன்ஸ் பண்ணி வச்சிருக்காம்ல. இந்த கூத்தை எங்க போய் சொல்ல என்று வியந்து பேசியது உண்டு. தற்போதும் கூட ரம்பாவின் தொடை இன்சூரன்ஸ் பற்றி பேச்சு எழுகிறது.
நிஜத்தில் அவர் தன் தொடையை இன்சூர் செய்யவில்லை. நீங்க பார்த்தீங்களாக்கும் என கேட்க வேண்டாம். அவரே சொல்லியிருக்கிறார்.
ஏனுங்க ரம்பா, நீங்கள் உங்கள் தொடையை இன்சூர் செய்திருப்பதாக பேசப்படுகிறதே. உண்மையை சொல்லுங்கள் என அவரிடம் செய்தியாளர்கள் கேட்டார்கள். அதற்கு அவர் கூறியதாவது,
நான் தொடையை இன்சூர் செய்திருக்கிறேன் என பல காலமாக பேசுகிறார்கள். நான் இன்சூர் எல்லாம் செய்யவில்லை. அப்படி இன்சூர் செய்வது என்றால் என் தலைமுடியை தான் இன்சூர் செய்வேன் என்றார்.
கனடாவை சேர்ந்த ஈழத் தமிழரான இந்திரன் பத்மநாதனை கடந்த 2010ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார் ரம்பா. திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்திவிட்டு கணவருடன் கனடாவில் செட்டில் ஆகிவிட்டார்.
Rambha:ரம்பாவின் க்யூட் பிள்ளைகள் இவர்கள் தான்
ரம்பாவுக்கு லான்யா, சாஷா என்று இரண்டு மகள்களும், ஷிவின் என்கிற மகனும் இருக்கிறார். அதில் லான்யா அப்படியே அம்மா மாதிரியே இருக்கிறார். லான்யாவின் புகைப்படங்களை அண்மையில் இன்ஸ்டாகிராமில் வெளியிட்டிருந்தார் ரம்பா.
அதை பார்த்தவர்களோ, உங்கள் மகளை நடிகையாக்கலாம். உங்களை போன்றே மிகவும் க்யூட்டாக இருக்கிறார். ஷிவினும் உங்களை மாதிரியே இருக்கிறார். சாஷா அப்பா ஜாடையில் இருக்கிறார். அழகான குடும்பம் என தெரிவித்தனர்.
Rambha: ரம்பா, பிள்ளைகள் சென்ற கார் விபத்து: மகள் சாஷா மருத்துவமனையில் அனுமதி
முன்னதாக கடந்த ஆண்டு நவம்பர் மாதம் காரில் தன் பிள்ளைகளை பள்ளியில் இருந்து அழைத்து வரச் சென்றார் ரம்பா. அவர் தன் குழந்தைகளுடன் வீடு திரும்பியபோது கார் விபத்துக்குள்ளானது. இதில் காரில் இருந்தவர்கள் காயம் அடைந்தனர். இளைய மகள் சாஷாவை மருத்துவமனையில் அனுமதித்தபோது எடுக்கப்பட்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்டார் ரம்பா. அதை பார்த்து திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் அதிர்ச்சி அடைந்தார்கள்.
ரம்பா இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது தன் மகள்கள், மகனின் வீடியோக்களை வெளியிட்டு வருவது ரசிகர்களுக்கு பிடித்திருக்கிறது.