அரிசிக்கொம்பன் யானையை பிடித்த வனத்துறையினர்!
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே சின்ன ஓவுலாபுரம் பெருமாள் கோவில் மலைப் பகுதியில் இருந்த அரிசிக்கொம்பன் யானையை வனத்துறையினர் பிடித்தனர்.
அமித் ஷாவை சந்தித்த மல்யுத்த வீரர்கள்!
டெல்லியில் பிரிஜ் பூஷன் எம்.பி-க்கு எதிராக பாலியல் புகார் அளித்ததோடு, அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என டெல்லியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள் மல்யுத்த வீரர்கள். இந்நிலையில், நேற்று இரவு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை பஜ்ரங் பூனியா, சாக்ஷி மாலிக், வினேஷ் போகத் ஆகிய மூவரும் சந்தித்து பேசியதாக தகவல் வெளியாகி உள்ளது. சுமார் இரண்டு மணிநேரத்துக்கு மேல் நீடித்ததாக சொல்லப்படும் இந்த சந்திப்பில், பிரிஜ் பூஷனுக்கு எதிராக உடனே குற்றப்பத்திருக்கை தாக்கல் செய்ய வேண்டும் மல்யுத்த வீரர்கள் கோரிக்கை வைத்ததாக தகவல் வெளியாகி உள்ளது.
ஆம்புலன்ஸ் மீது மோதிய ஆம்னி பஸ்! – 3 பேர் பலியான சோகம்!
பெரம்பலூர் அருகே தேசிய நெடுஞ்சாலையில் டிராக்டர் மீது வேன் மோதி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் காயமடைந்தவர்களை மீட்க சென்ற 108 ஆம்புலன்ஸ் மீது தனியார் சொகுசு பேருந்து மோதியதில் ஆம்புலன்ஸ் ஓட்டுநர் உயிரிழந்தார். மேலும் வேன் விபத்தில் காயமடைந்தவர்கள் 2 பேர் மீதும் சொகுசு பேருந்து மோதியதால், 3 பேர் உயிரிழந்துள்ளனர். விபத்தில் சிக்கியவர்களை மீட்க சென்ற இடத்தில் ஏற்பட்ட இந்த விபத்து பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.