சென்னை: தளபதி விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கும் லியோ படத்தில் நடித்து வருகிறார்.
லியோ படப்பிடிப்பு முடிந்ததும் வெங்கட் பிரபு இயக்கும் தளபதி 68 படத்தில் நடிக்கவுள்ளார் விஜய்.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இன்னும் டைட்டில் கன்ஃபார்ம் ஆகவில்லை.
இந்நிலையில், விஜய்யும் வெங்கட் பிரபுவும் இணைந்து செம்ம மாஸ்ஸான டைட்டில் ஒன்றை தேர்வு செய்துள்ளதாக சொல்லப்படுகிறது.
தளபதி 68 டைட்டில் அப்டேட்:விஜய் தற்போது நடித்து வரும் லியோ திரைப்படம் அக்டோபர் 19ம் தேதி ரிலீஸாகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஆகஸ்ட் மாதம் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதனைத் தொடர்ந்து முதன்முறையாக வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிக்கவுள்ளார் விஜய். இது விஜய்யின் 68வது படமாக உருவாகவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு செப்டம்பர் அல்லது அக்டோபர் இறுதியில் தொடங்கும் என சொல்லப்படுகிறது. அதேநேரம் இம்மாதம் 22ம் தேதி விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு தளபதி 68 படத்திற்கு பூஜை போடப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், தளபதி 68 படத்தின் டைட்டிலை வெளியிடுவது குறித்தும் படக்குழு ஆலோசனை செய்து வருகிறதாம்.
வெங்கட் பிரபுவின் படங்களுக்கான டைட்டில் எப்போதுமே ரசிகர்களிடம் அதிகம் வரவேற்பைப் பெறும். முக்கியமாக டைட்டிலுடன் ஒரு டேக் லைனும் சேர்ந்து மாஸ் காட்டுவார் வெங்கட் பிரபு. இந்நிலையில், விஜய்யும் வெங்கட் பிரபுவும் சேர்ந்து தளபதி 68 படத்திற்கு தாறுமாறான ஒரு டைட்டிலை முடிவு செய்து வைத்துள்ளார்களாம்.
அதன்படி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் ஷார்ட் வெர்ஷனான ‘CSK’ தான் தளபதி 68 படத்தின் டைட்டில் என சொல்லப்படுகிறது. ‘CSK’ என்பது கிரிக்கெட் தல தோனியின் முக்கியமான அடையாளமாக பார்க்கப்படுகிறது. ஐபிஎல் கிரிக்கெட் அணியான ‘CSK’-ஐ தங்களது பெருமையாக தமிழர்கள் கொண்டாடி வருகின்றனர். இதனால், தளபதி 68 படத்திற்கு ‘CSK’ என்ற டைட்டிலை வைக்கலாம் என வெங்கட் பிரபு முடிவு செய்துள்ளாராம்.
விஜய்யும் தல தோனியும் ஏற்கனவே நல்ல நண்பர்களாக வலம் வருகின்றனர். விரைவில் தோனி தயாரிக்கும் படத்திலும் விஜய் ஹீரோவாக நடிக்கலாம் எனக் கூறப்படுகிறது. அதேபோல், வெங்கட் பிரபுவும் தல தோனி, ‘CSK’ அணி இரண்டுக்கும் மிகப் பெரிய ரசிகர். அவர் இயக்கிய முதல் படமாக சென்னை 68 கூட கிரிக்கெட்டை பின்னணியாகக் கொண்டு உருவானது தான்.
இதனடிப்படையில் தளபதி 68 படத்துக்கு ‘CSK’ என்ற டைட்டில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும் இதுகுறித்து அபிஸியலாக அப்டேட் வெளியானால் மட்டுமே இதன் பின்னணி குறித்து தெரியவரும். தோனி ரசிகர்களையும் டார்க்கெட் செய்துதான் தளபதி 68 படத்திற்கு ‘CSK’ என டைட்டில் வைக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.