மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் அனுமதியின்றி எடுத்த புகைப்படங்களை சமூக வலைதளங்களில் இருந்து நீக்க கோரி உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு மீதான வழக்கு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது கோவில் நிர்வாகம் தரப்பில் மீனாட்சி அம்மன் கோயிலில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஒப்பந்தம் கோரப்பட்டு அதன்படியே அனுமதி வழங்கப்படுகிறது என வாதம் முன் வைக்கப்பட்டது.
இதனையடுத்து கோயில் தரப்பு பதிலை பதிவு செய்து மதுரை மீனாட்சி அம்மன் கோயிலில் புகைப்படம் எடுக்க தடை விதிக்க முடியாது என்று வழக்கை தள்ளுபடி செய்தது.
மேலும், அமெரிக்கா போன்ற நாடுகள் அங்கே 100 வருட புராதான சின்னங்கள் என்று கூறி புகைப்படங்களை எடுத்து பல கோரிக்கை வியாபாரம் செய்யும் சூழலில் நாம் 2000 வருட புராதான சின்னங்களை வைத்து சும்மா இருக்கிறோம் இன நீதிபதி தெரிவித்துள்ளார்.