மும்பை அடுத்த 6 மணி நேரத்தில் அரபிக்கடலில் உருவான புயல் தீவிர புயலாக வலுப்பெறும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு மற்றும் தென்கிழக்கு அரபிக்கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெற்றுள்ளது. இப் புயலுக்கு ‘பிபோர்ஜோய்’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்தப் பெயர் வங்கதேசம் வழங்கியுள்ளது. ‘பிபோர்ஜோய்’ என்ற பெயருக்கு ஆபத்து என்பது பொருளாகும். புயல் வலுப்பெற்று வடக்கு நோக்கி நகர வாய்ப்புள்ளது என்றும், இந்த புயலால் கேரளா முதல் மகாராஷ்டிர மாநிலம் வரையிலான மேற்குக் கடற்கரைப் […]