சென்னை சென்னையில் உள்ள அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் 30க்கும் மேற்பட்ட சிறுவர்கள் பணியில் அமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்துள்ளது. சென்னையில் உள்ள அம்பத்தூரில் இயங்கிவரும் ஆவின் பால் பண்ணையில் ஒப்பந்த நிறுவனத்தின் சார்பாக 30-க்கும் மேற்பட்ட சிறுவர்கள் தொழிலாளர்கள் பணி அமர்த்தப்பட்டதாகப் புகார் எழுந்த நிலையில்,சிறுவர்கள் ஐஸ்கிரீம் பேக்கிங் பிரிவில் பணியாற்றியது தொடர்பான வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. கடந்த 2 மாதங்களாக பணியாற்றிய குழந்தை தொழிலாளர்களுக்கு ஒப்பந்த நிறுவனம் உரிய ஊதியம் வழங்கவில்லை எனக்கூறி, பாதிக்கப்பட்ட சிறுவர்கள் […]