சென்னை அமைந்தகரையை தலைமை இடமாகக் கொண்டு இயங்கி வந்த ஆருத்ரா கோல்டு நிறுவனம் முதலீட்டுக்காக 25 முதல் 30 சதவீதம் வரை சுமார் ஒரு லட்சம் முதலீட்டாளர்களிடம் இருந்து ரூபாய் 2,438 கோடி மோசடி செய்ததாக சில மாதங்களுக்கு முன்பு புகார் எழுந்தது.
இது குறித்து எழுந்த தொடர் புகார்களின் அடிப்படையில் 21 பேர் மீது பொருளாதார குற்றத் தடுப்பு பிரிவு வழக்கு பதிவு செய்தது. பல மாவட்டங்களில் இருந்து பல நபர்கள் போலீஸாரால் கைது செய்யப்பட்டனர்.
இந்த வழக்கில் கைதான ரூசோ என்ற நபரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் நடிகர் தயாரிப்பாளர் மற்றும் பாஜக ஓபிசி பிரிவு தலைவர் ஆர் கே சுரேஷ் க்கும் சம்பந்தம் இருப்பது தெரியவந்தது.
அதைத் தொடர்ந்து உரிய ஆவணங்களுடன் விசாரணைக்கு நேரில் ஆஜராக பொருளாதார குற்றத் தடுப்புபிரிவு ஆர்கே சுரேஷ்க்கு சம்மன் அனுப்பியது. ஆனால் தொடர்ந்து சில மாதங்களாக ஆர்கே சுரேஷ் வெளிநாட்டில் தங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. குற்றப்பிரிவு போலீசாரின் மனுவை ரத்து செய்யக் கோரி உயர் நீதிமன்றத்தில் ஆர் கே சுரேஷ் மனு தாக்கல் செய்துள்ளார்.
அந்த மனுவில் ரூசோ படம் சம்பந்தப்பட்ட வேலைக்காக மட்டும் தான் என்னை அணுகினார். அதுத் தொடர்பாக மட்டுமே எங்கள் இருவருக்கிடையில் பணம் பரிவர்த்தனை நடைபெற்றது. எங்கள் குடும்ப சூழ்நிலையின் காரணமாக வெளிநாட்டில் இருப்பதாகவும் அதனால் நேரில் ஆஜராக முடியாத நிலை ஏற்பட்டு இருப்பதாகவும் அந்த மனுவில் கூறி இருக்கிறார்.