ஓவல்: இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இரண்டு பிட்சுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இப்படி இரண்டு பிட்ச் உருவாக்கப்பட முக்கிய காரணம் உள்ளது.
இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி இன்று தொடங்கி உள்ளது. லண்டன் ஓவல் மைதானத்தில் இந்த ஆட்டம் நடக்கிறது. பிட்ச் அதிக புற்களோடு பச்சை நிறத்தில் காட்சி அளிக்கிறது.
இதனால் பவுலிங்கிற்கு.. முக்கியமாக பாஸ்ட் பவுலிங்கிற்கு ஆதரவாக பிட்ச் இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஆட்டத்தில் பிட்ச் ஸ்பின் பவுலிங்கிற்கு உதவாது என்பதால் ஒரே ஒரு ஸ்பின் பவுலருடன் இந்திய அணி களமிறங்கி உள்ளது.
அந்த வீரர் ஜடேஜா. இந்திய அணியில் இந்த முறை அஸ்வின் எடுக்கப்படவில்லை. டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின் நம்பர் 1 ஸ்பின் பவுலராக இருந்தும் கூட அவர் அணியில் எடுக்கப்படவில்லை. காரணம்.. ஜடேஜாவிடம் பேட்டிங் ஆப்ஷனும் உள்ளது.
இந்திய அணியில் இன்று ரோஹித் சர்மா (கேட்ச்), ஷுப்மான் கில், சேதேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யா ரஹானே, ஸ்ரீகர் பாரத் (வி.கே), ரவீந்திர ஜடேஜா, ஷர்துல் தாக்கூர், உமேஷ் யாதவ், முகமது ஷமி, முகமது சிராஜ் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
அதேபோல் ஆஸ்திரேலிய அணியில் டேவிட் வார்னர், உஸ்மான் கவாஜா, மார்னஸ் லாபுசாக்னே, ஸ்டீவன் ஸ்மித், டிராவிஸ் ஹெட், கேமரூன் கிரீன், அலெக்ஸ் கேரி (வாரம்), பாட் கம்மின்ஸ் (கேட்ச்), மிட்செல் ஸ்டார்க், நாதன் லியான், ஸ்காட் போலண்ட் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
ஆட்டம்: தற்போது வரை ஆஸ்திரேலிய அணி 1 விக்கெட்டிற்கு 38 ரன்களை இழந்து ஆடி வருகிறது. இன்று ஆட்டத்தின் தொடக்கத்திலேயே உஸ்மான் குவாஜா சிராஜ் பந்தில் டக் அவுட் ஆனார்.
முதல் செஷன் முழுக்க இந்திய அணி இரண்டு பாஸ்ட் பவுலர்கள்.. சிராஜ் – ஷமி ஆகியோரை மட்டுமே பயன்படுத்தியது. இந்த இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இரண்டு பிட்சுகள் உருவாக்கப்பட்டு உள்ளன. இப்படி இரண்டு பிட்ச் உருவாக்கப்பட முக்கிய காரணம் உள்ளது.
இரண்டு பிட்ச் ஏன்? : லண்டனில் தற்போது ஆயில் போராட்டம் என்று கூறப்படும் எண்ணெய் போராட்டங்கள் நடந்து வருகின்றன. Just Stop Oil group என்ற குழு சார்பாக இந்த போராட்டம் நடக்கிறது. காலநிலை மாற்ற போராளிகள் குழுவான Extension Rebellion மற்றும் Insulate Britain என்ற இரண்டு குழுக்கள் இணைந்து போராட்டத்தை நடத்தி வருகின்றன.
“புதிதாக எண்ணெய் கிணறு தோண்ட கூடாது, எரிபொருள் உரிமம் அளிக்க கூடாது மற்றும் எண்ணெய் உற்பத்தியை நிறுத்த வேண்டும்” என்ற குறிக்கோளுடன் இவர்கள் இணைந்து போராடி வருகிறார்கள். லண்டனில் கடந்த சில நாட்களாக இவர்களின் போராட்டம் தீவிரம் அடைந்து உள்ளது.
முக்கியமாக சாலைகளை மறித்து போராட்டம் செய்வது, வாகனங்களை பஞ்சர் செய்வது, தீ வைப்பது போன்ற போராட்டங்களை இவர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இந்த குழு இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டி நடக்கும் ஓவல் மைதானத்தில் பிட்சை சேதப்படுத்துவோம்.. ஆட்டத்திற்கு இடையில் உள்ளே புகுந்து பிட்சை சேதப்படுத்துவோம் என்று கூறி இருந்தனர்.
இவர்களின் எச்சரிக்கை காரணமாக பாதுகாப்பு கருதி அங்கே இந்தியா ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டிக்காக இரண்டு பிட்சுகள் உருவாக்கப்பட்டு உள்ளன.