சென்னை: புஷ்பா படத்தில் அல்லு அர்ஜுன் உடன் இணைந்து நடிகை சமந்தா போட்ட கவர்ச்சி குத்தாட்டம் இளைஞர்களை தாண்டி குழந்தைகளையும் வெகுவாக கவர்ந்துள்ளது.
புஷ்பா படம் வெளியாகி ஒன்றாரை ஆண்டுகள் ஆன பின்பும் அதன் கிரேஸ் கொஞ்சம் கூட குறையவே இல்லை. பள்ளி, கல்லூரிகள், ஊர்த் திருவிழாக்கள், கல்யாண விழாக்கள் என எங்கே பார்த்தாலும் அந்த பாட்டு இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில், நிகழ்ச்சி ஒன்றில் மேடையில் அந்த பாடலுக்கு நடனம் ஆடாமல், இருக்கையில் இருந்து எழுந்தபடியே சிறுமி ஒருவர் போட்ட செம குத்தாட்ட வீடியோ இணையத்தில் தீயாக பரவி வருகிறது.
சொல்லியடித்த புஷ்பா: நான் ஃபிளவர் இல்லை ஃபயருன்னு புஷ்பா படத்தில் நடிகர் அல்லு அர்ஜுன் வசனம் பேசியிருப்பார். படமும் அதே போல செம ஃபயராக பான் இந்தியா ஹிட் அடித்தது. அல்லு அர்ஜுன், ராஷ்மிகா மந்தனா, பகத் ஃபாசில் நடிப்பில் வெளியான புஷ்பா படம் மிகப்பெரிய பாக்ஸ் ஆபிஸ் ஹிட் அடித்த நிலையில், அந்த படத்தின் இயக்குநர் சுகுமார் அடுத்த பாகத்தை முதல் பாகத்தை விட பிரம்மாண்டமாக இயக்கி வருகிறார்.
புஷ்பா படத்திற்கு தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்த நிலையில், அந்த படத்தில் இடம்பெற்ற அனைத்து பாடல்களும் சூப்பர் ஹிட் அடித்தன. அதிலும் சமந்தா நடனம் ஆடிய அந்த ஓ சொல்றியா மாமா பாடல் சொல்லவே வேண்டாம்.
செம குத்து குத்திய சமந்தா: நாக சைதன்யாவை விவாகரத்து செய்த நிலையில், நடிகை சமந்தா தெலுங்கு சினிமாவிலேயே நடிக்க மாட்டார் என பேச்சுக்கள் அடிபட்டு வந்த நிலையில், அல்லு அர்ஜுன் உடன் இணைந்து புஷ்பா படத்தில் குத்தாட்ட பாடலுக்கு செம குத்து குத்தியிருந்தார் சமந்தா.
இதற்கு முன்னதாக இந்த அளவுக்கு கவர்ச்சி நடனத்தை சமந்தா ஆடாத நிலையில், ஒட்டுமொத்த இந்தியாவிலும் இந்த பாடல் வெளியான மாத்திரத்திலேயே டிரெண்டானது. தமிழில் ஓ சொல்றியா மாமா பாடலை நடிகை ஆண்ட்ரியா தனது மெய் சிலிர்க்கும் குரலில் பாடி அசத்தி உள்ளார்.
மிரள வைத்த சிறுமி: ஓ சொல்றியா மாமா பாடலுக்கு பள்ளிகள், கல்லூரிகள், சுப நிகழ்ச்சிகள், திருவிழாக்கள் என பல இடங்களிலும் பலர் நடனமாடி வருகின்றனர். பாடல் வந்த சமயத்திலும் பல நடிகைகள் அந்த பாடலுக்கு நடனமாடி ரீல்களை வெளியிட்டு இருந்தனர்.
இந்நிலையில், சிறுமி ஒருவர் அந்த பாடலுக்கு செம சூப்பராக போட்டுள்ள நடன வீடியோ தற்போது சோஷியல் மீடியாவில் தீயாக பரவி வருகிறது. கமெண்ட் பக்கத்தில் சிலர், சமந்தாவையே இந்த பொண்ணு ஓவர் டேக் பண்ணிட்டாங்க என்றும், இதுபோன்ற கிளாமர் பாடலுக்கு குழந்தைகளை நடனம் ஆட வைக்கக் கூடாது போன்ற கமெண்ட்டுகளும் குவிந்து வருகின்றன.