வைத்திலிங்கம் இளைய மகன் திருமணம் இன்று தஞ்சாவூரில் நடைபெற்றது. இதில் ஒ.பன்னீர் செல்வம், டிடிவி தினகரன் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். இந்த விழாவில்
, டிடிவி தினகரன்,
ஆகிய மூவரும் இணைந்து கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் சசிகலா நிகழ்வில் கலந்துகொள்ளவில்லை.
சசிகலாவின் கையில் காயம் ஏற்பட்டதால் அவர் கலந்து கொள்ளவில்லை என்று அவருக்கு நெருக்கமான வட்டாரத்தில் கூறுகின்றனர். குணமான பின்னர் வீட்டிற்கே நேரடியாக சென்று மணமக்களை வாழ்த்துவார் என்றும் கூறுகிறார்கள். ஆனால் சசிகலா நிகழ்வில் பங்கேற்காததற்கு வேறு சில காரணங்களை கூறுகின்றனர் விவரம் அறிந்தவர்கள்.
டிடிவி தினகரனுடனான கருத்து வேறுபாடு இன்னும் சரியாகவில்லை. சசிகலா தற்போது தனது சகோதரர் திவாகரன் பக்கம் நிற்பதால் தினகரன் பங்கேற்கும் நிகழ்வில் கலந்துகொள்ள வேண்டாம் என்று முடிவெடுக்கப்பட்டதாக கூறுகிறார்கள்.
அதுமட்டுமல்லாமல் ஓபிஎஸ், தினகரன் ஆகியோரோடு இணைந்தால் அரசியல் ரீதியாகவும் தனக்கு பின்னடைவாக இருக்கும் என்று சசிகலா நினைக்கிறாராம். அதிமுக முழுவதும்
பக்கம் சென்றுவிட்ட நிலையில் ஓபிஎஸ் முழுவதுமாக பலமிழந்து நிற்கிறார். தினகரன் தனிக் கட்சி நடத்தி வருகிறார்.
இப்படியான சூழலில் இவர்கள் பக்கம் நின்றால் பிரயோஜனம் இல்லை.எடப்பாடி பழனிசாமி பக்கம் நிற்பதே அரசியல் எதிர்காலத்துக்கு சரியானதாக இருக்கும் என்று சசிகலா நினைக்கிறாராம்.
ஓபிஎஸ்ஸூம், தினகரனும் மாறி மாறி எடப்பாடி பழனிசாமியை காட்டமாக விமர்சிக்கும் போதும், அனைவரையும் ஒருங்கிணைத்து செல்ல வேண்டும் என்று சசிகலா வார்த்தைகளை கவனமாக கையாள்கிறார்.
ஆனால் எடப்பாடி பழனிசாமியோ சசிகலாவை கட்சிக்குள் அனுமதித்தால் தனது இடத்துக்கே ஆபத்து ஏற்பட்டுவிடும் என அஞ்சுகிறார். அவரது ஆதரவாளர்களான முன்னாள் அமைச்சர்களும் அதையே நினைக்கிறார்கள்.
இதை அறிந்த சசிகலா எடப்பாடி பழனிசாமியிடம் தனது நிலைப்பாடு குறித்து பேச மாஜி அமைச்சர்கள் இருவரை தூதுவிட்டதாக கூறுகிறார்கள். தான் உள்ளே வந்தால் தனது குடும்ப உறுப்பினர்களின் தலையீடு இருக்காது என்றும் உச்ச பதவியை கோரப்போவதில்லை என்றும் அதிமுகவை மீண்டும் ஆட்சிக்கட்டிலில் அமர்த்துவதே தனது நோக்கம் என்றும் கூறியதாக சொல்கிறார்கள். இதற்கு எடப்பாடி பழனிசாமி தரப்பு சம்மதிக்கவில்லை என்றே தற்போது வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன.