நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அடுத்த புதுப்பட்டி காமராஜ் நகர் பகுதியைச் சேர்ந்த ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரை கட்டையால் தாக்கி கொலை செய்த இளைஞரை போலீசார் கைது செய்தனர்.
ஓய்வுபெற்ற மின்வாரிய ஊழியரான சுப்பிரமணி என்பவர், நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல வீட்டின் வாசலில் உறங்கிய போது மர்ம நபரால் கொலை செய்யப்பட்டார்.
விசாரணையில் அதே பகுதியைச் சேர்ந்த அருண்குமார் என்ற இளைஞர், சுப்பிரமணியை கொன்றதை போலீசார் கண்டுபிடித்தனர். மது பழக்கத்திற்கு அடிமையான அருண்குமார், சுப்பிரமணி உறங்கும் போது அவரது சட்டைப்பையில் இருந்து பணத்தை திருடிச் சென்று மது அருந்துவதை வாடிக்கையாக கொண்டிருந்ததாகவும், சம்பவத்தன்றும் அவன் கைவரிசை காட்டிய போது சுப்பிரமணி கண் விழித்துக் கொண்டதால், தன்னை வெளியே காட்டிக் கொடுத்து விடுவார் என்றெண்ணி அவரை அருண்குமார் கொலை செய்ததாகவும் போலீசார் தெரிவித்தனர்.