குடும்பத்துடன் மலேசியாவுக்கு டூர் சென்ற ஐஸ்வர்யா ராஜேஷ்!
காக்கா முட்டை, வட சென்னை, கனா உள்பட பல படங்களில் நடித்தவர் ஐஸ்வர்யா ராஜேஷ். அதோடு இந்த ஆண்டில் அவரது நடிப்பில் பர்ஹானா, தி கிரேட் இந்தியன் கிச்சன், டிரைவர் ஜமுனா, சொப்பன சுந்தரி, தீரா காதல் போன்ற படங்கள் அடுத்தடுத்து வெளியாகின. இந்த நிலையில் தற்போது தனது குடும்பத்தாருடன் மலேசியாவுக்கு சுற்றுலா சென்று உள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ்.
மலேசியாவில் உள்ள மேகலா என்ற இடத்திற்கு சென்று அங்குள்ள விதவிதமான இயற்கை காட்சிகளையும் உணவுகளையும் போட்டோ எடுத்து வெளியிட்டுள்ள ஐஸ்வர்யா ராஜேஷ், தற்போது தனது ஒட்டுமொத்த குடும்ப உறுப்பினர்களுடன் மலேசியாவின் இரட்டை கோபுரத்திற்கு இடையில் நின்றவாறு புகைப்படம் எடுத்துக் கொண்டுள்ளார். இன்ஸ்டாகிராமில் அவர் வெளியிட்டுள்ள இந்த புகைப்படம் தற்போது சோசியல் மீடியாவில் வைரல் ஆகி வருகிறது.