சபரிமலை அய்யப்பன்: இனி ஈஸியா காணிக்கை செலுத்தலாம்- பக்தர்களுக்கு செம அப்டேட்!

கேரள மாநிலம் சபரிமலை அய்யப்பன் கோவிலுக்கு பல்வேறு மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் படையெடுக்கின்றனர்.

கார்த்திகை, மார்கழி போன்ற மாதங்களில் தமிழ்நாட்டில் திரும்பும் திசையெங்கும் கருப்பு உடை அணிந்த அய்யப்ப பக்தர்களை காணலாம். தமிழகத்திலிருந்து மிக அதிகளவிலான பக்தர்கள் விரதமிருந்து ஆண்டு தோறும் சபரிமலை சென்று திரும்புகின்றனர். அதேபோல் சபரிமலை நடை ஒவ்வொரு மாதப் பிறப்பின்போதும் முதல் 5 நாள்கள் திறக்கப்படுவதும் வழக்கம்.

சபரிமலை செல்ல முடியாதவர்கள் தங்கள் காணிக்கைகளை கோவிலுக்கு செல்லும் பக்தர்களிடம் கொடுத்து அனுப்புவது வழக்கம். இந்நிலையில் இருக்கின்ற இடத்திலிருந்து பக்தர்கள் சபரிமலை அய்யப்பனுக்கு காணிக்கை செலுத்தும் புதிய வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

சபரிமலை அய்யப்பன் கோயிலில் இணைய வழியில் காணிக்கை செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதன்மூலம் உலகின் எந்த மூலையில் இருந்தும் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு பணம் செலுத்தலாம்.

முதல் முறையாக சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு ஆன்லைன் மூலம் காணிக்கைப் பணம் செலுத்தும் வசதி அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.

இதன்மூலம் இனி சபரிமலை கோயிலின் இணையதளப் பக்கத்திற்கு (www.sabarimalaonline.org) சென்று பக்தர்கள் இருந்த இடத்தில் இருந்தே இணையதளம் வழியாக காணிக்கை செலுத்தலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. சபரிமலை பக்தர்கள் மத்தியில் இந்த திட்டம் வரவேற்பை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.