கன்னியாகுமரி மாவட்டத்தில் செல்போன் பேசிய வாலிபர் மாடியிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
கேரள மாநிலத்தை சேர்ந்தவர் விக்ரமன். இவரது மகன் அனு, கன்னியாகுமரி மாவட்டம் கழுவன்திட்டை பகுதியில் உள்ள சலூன் கடையில் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் குழந்தைகள் உள்ளனர். ஆனால் சில ஆண்டுக்கு முன்பு குடும்பத் தகராறு காரணமாக மனைவி, குழந்தையுடன் பிரிந்து சென்று விட்டார்.
இந்நிலையில் வழக்கம் போல் நேற்று வேலைக்கு சென்ற அனு, செல்போன் பேசுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். இதையடுத்து செல்போனில் பேசிய அனு, எதிர்பாராத விதமாக திடீரென மாடியில் இருந்து தவறி கீழே விழுந்துள்ளார். இதைத்தொடர்ந்து அக்கம் பக்கத்தினர் அனுவை மீட்டு சிகிச்சைக்காக குழித்துறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.
பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட அனு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இந்நிலையில் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இது சம்பவம் அப்பகுதியில் சோகத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.